DMK Candidate List 2024: 21 தொகுதி திமுக வேட்பாளர்கள் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ!
”Loksabha Election 2024: இந்த நிலையில் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாமதம் ஆகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி உடனான தொகுதி பங்கீடு முழுமையாக முடிந்த பிறகு நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது”

நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.
மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
திமுக கூட்டணி
திமுக கூட்டணியை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.