Edappadi Palanisamy: மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் முடிவு அல்ல! 2026 தேர்தலுக்கான படிப்பினை கிடைத்துள்ளது - ஈபிஎஸ்
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல. இந்த முடிவுகள் நம்மை சோர்வடைய செய்யாது. 2026 சட்டப்பேரவை பொது தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்கு கிடைத்திருக்கிறது என்ற எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் முடிவு அல்ல - எடப்பாடி பழனிசாமி அறிக்கை
தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி.
நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய் பிரச்சார பலமும், அறத்துக்கு அப்பாற்ப்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதமாக வந்திருக்கின்றன.