DMK Candidate List 2024: திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
DMK Manifesto 2024: மோடி ஆட்சி தொடர்வது நாட்டிற்கு நல்லதல்ல நாட்டின் மீது கொண்ட அக்கறையால் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்கு இந்தியா கூட்டணியை இந்தியா முழுமைக்கும் அமைத்துள்ளோம்.
DMK Manifesto 2024: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாசிச பாஜக இந்தியாவை எல்லா வகையிலும் மிக மோசமாக பாழ்படுத்தி உள்ளது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை. இந்தியாவில் இருந்த கட்டமைப்புகள் அனைத்தையும் சிறுக சிறுக சிதைத்துள்ளனர். கையில் கிடைத்த அதிகாரத்தை பாஜக அரசு வீணடித்து உள்ளது என்பதே உண்மை.
மோடி ஆட்சி தொடர்வது நாட்டிற்கு நல்லதல்ல நாட்டின் மீது கொண்ட அக்கறையால் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்கு இந்தியா கூட்டணியை இந்தியா முழுமைக்கும் அமைத்துள்ளோம். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றியத்தில் அமைய உள்ள புதிய ஆட்சியானது இந்தியாவுடைய கூட்டணி மாநிலங்களை அரவணைக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். சமத்துவமும் சம தர்ம எண்ணம் கொண்ட ஆட்சியாக அமைய வேண்டும். மொத்தத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காத்து மக்களாட்சி மாண்பை சமப்படுத்தும் ஆட்சியாக அமைய வேண்டும் என்றார். மேலும் திமுக அறிக்கையின் முக்கிய அம்சங்கள் சிலவற்றையும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கையில் முக்கியமான செயல் திட்டங்கள்
-மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்படும்.
- ஆளுநர் பதவி தேவை இல்லை என்றாலும் அந்தப் பதவி இருக்கும் வரை மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்று ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
-ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
-உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
-புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்,
- ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நேர்முக தேர்வு ஆகியவை நடத்தப்படும்
-ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
-அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதிவழங்கப்படும்.
-திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
-தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
-ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்,
-புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
-நாடாளுமன்ற சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
-நாடு முழுவதும் அரசு உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்.
-இந்தியா முழுமைக்கும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
- தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
-மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சி குழு அமைக்கப்படும் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.
திமுக போட்டியிடும் தொகுதிகள்!
வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர், தூத்துக்குடி, தேனி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
திமுக வேட்பாளர்கள் பட்டியல்:-
திமுக வின் 21 வேட்பாளர்கள் பட்டியல்:
1,தூத்துக்குடி- கனிமொழி,
2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.
3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,
4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,
5,மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,
7,காஞ்சீபுரம் - ஜி.செல்வம்,
8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை
10,தர்மபுரி- ஆ.மணி
11,ஆரணி-தரணிவேந்தன்
12,வேலூர்- கதிர் ஆனந்த்,
13,கள்ளக்குறிச்சி- மலையரசன்
14,சேலம்-செல்வகணபதி
15,கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார்.
16,பெரம்பலூர் - அருண் நேரு
17,நீலகிரி - ஆ.ராசா,
18,பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி
19,தஞ்சாவூர் - முரசொலி
20,ஈரோடு-பிரகாஷ்
21,தேனி- தங்க தமிழ்செல்வன்
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் புதியவர்கள் 11 பேர், பெண்கள் 3 பேர், பட்டதாரிகள்19 பேர், முதுநிலை பட்டதாரிகள் 12 பேர், முனைவர் இருவர், மருத்துவர்கள் 2 பேர், வழக்கறிஞர்கள் 6 பேர் உள்ளனர்.
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் புதியவர்கள் 11 பேர், பெண்கள் 3 பேர், பட்டதாரிகள்19 பேர், முதுநிலை பட்டதாரிகள் 12 பேர், முனைவர் இருவர், மருத்துவர்கள் 2 பேர், வழக்கறிஞர்கள் 6 பேர் உள்ளனர்.
அதேசமயம் தி்முக வேட்பாளர்களில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.