தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Rajnath Singh: சனாதனத்தை அவமதித்த உதயநிதியை மன்னிக்க முடியுமா? திருவாரூரில் ராஜ்நாத் சிங் ஆவேசம்!

Rajnath Singh: சனாதனத்தை அவமதித்த உதயநிதியை மன்னிக்க முடியுமா? திருவாரூரில் ராஜ்நாத் சிங் ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Apr 08, 2024 08:16 PM IST

”பா.ஜ.,வை எதிர்க்கும் போது, இந்திய கூட்டணி தலைவர்கள், இந்து கடவுள்களையும், தெய்வங்களையும் அவமதிக்க துவங்கி உள்ளனர்”

ராஜ்நாத் சிங் பரப்புரை
ராஜ்நாத் சிங் பரப்புரை

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ராஜ்நாத் சிங்!

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திருவாரூர், கரூர், நாமக்கல் பகுதிகளில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரப்புரை மேற்கொண்டார். 

திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதீய ஜனதா கட்சி நாட்டின் வளர்ச்சிக்கான தொலை நோக்குப் பார்வையை கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல், அதிகாரத்திற்காக மட்டுமே ஒன்றாக இருக்கிறது .

தேர்தல் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் ஒன்று சேர்வதற்கு ஒரே காரணம் அதிகாரம். எங்களுக்கு தேசம்தான் முதன்மை, ஆனால் அவர்களுக்கு அவர்கள் குடும்பம்தான் முதன்மையானது. 

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், கச்சத்தீவு இழப்புக்கும் யாரேனும் பொறுப்பு என்றால் அது திமுகவும், காங்கிரஸும் தான். இதுபோன்ற பல தவறுகளை இந்த நாட்டில் காங்கிரஸ் செய்திருக்கிறது, அதற்காக இந்தியாவும் நமது மீனவர்களும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது” என ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். 

"தமிழகத்தில் லட்சக்கணக்கான மீனவர்கள் வாழ்கிறார்கள், காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையால் பல மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பலமுறை அவர்கள் உயிரையும் இழந்துள்ளனர். தற்போது மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள அரசு, இலங்கையுடன் நல்லுறவைப் பயன்படுத்திக் கொள்கிறது என கூறினார். 

சனாதன தர்மம் டெங்கு, மலேரியா போன்றது, அதை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட வெட்கக்கேடான பேச்சை மன்னிக்க முடியுமா?  என்றும் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார். 

பா.ஜ.,வை எதிர்க்கும் போது, இந்திய கூட்டணி தலைவர்கள், இந்து கடவுள்களையும், தெய்வங்களையும் அவமதிக்க துவங்கி உள்ளனர்.

“தேர்தல் பிரச்சாரம் இப்போதுதான் தொடங்கிவிட்டது, ஆனால், பாஜகவையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் தாக்கிக் கொண்டே, இந்து மதத்தையே இழிவுபடுத்தத் தொடங்கி உள்ளனர். 

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை இந்திய அணி எதிர்ப்பதாகக் குற்றம் சாட்டிய பாதுகாப்பு அமைச்சர், "பாராளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இந்திய கூட்டணியின் தலைவர்கள் எதிர்த்ததால், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றார். 

இந்திய ஜனநாயகக் கோவிலில் செங்கோலை நிறுவியதன் மூலம், பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்தை முழுமையாக மதிக்கிறார் என ராஜ்நாத் சிங் கூறினார். 

WhatsApp channel