Loksabha Election 2024: ’பாஜகவுக்கு 200 சீட் கூட தேறாது!’ அடித்து சொல்லும் பிரியங்க் கார்கே!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Loksabha Election 2024: ’பாஜகவுக்கு 200 சீட் கூட தேறாது!’ அடித்து சொல்லும் பிரியங்க் கார்கே!

Loksabha Election 2024: ’பாஜகவுக்கு 200 சீட் கூட தேறாது!’ அடித்து சொல்லும் பிரியங்க் கார்கே!

Kathiravan V HT Tamil
Apr 06, 2024 03:06 PM IST

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

வறட்சி நிவாரணம் கோரும் திட்டத்தை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதில் மாநில அரசு தாமதம் செய்ததாக குற்றம் சாட்டியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “பொய் சொல்கிறார்” என பிரியங்க் கார்கே குற்றம்சாட்டி உள்ளார். 

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது என்று ஆர்எஸ்எஸ் எடுத்த கருத்து கணிப்பு கூறுகிறது. கர்நாடகாவில் பாஜகவால் எட்டு இடங்களைக் கூட தாண்ட முடியாது. 14 முதல் 15 தொகுதிகளில் பாஜகவுக்குள் உள்கட்சி பூசல் நிலவுகிறது என அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், பல மூத்த பாஜக தலைவர்கள் பாஜகவை தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசி வருகின்றனர். சில பாஜக தலைவர்கள் ஒரு குடும்பத்தால் பாஜக கர்நாடகாவில் மாசுபட்டுள்ளது என்று கூறுகிறார்கள். 

அசல் பாஜகவை மீண்டும் நிறுவ விரும்புவதாக அவர்கள் கூறுகிறார்கள். பாஜகவில் உள்ள பசன்கவுடா பாட்டீல் யத்னால், சி.டி.ரவி, அனந்த்குமார் ஹெக்டே, ஈஸ்வரப்பா போன்ற இந்துத்துவா தலைவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் தங்களைத் தாங்களே எதிர்த்துப் போராடுகிறார்கள். இந்த சூழலை காங்கிரஸ் அதை உருவாக்கவில்லை என பிரியங்க் கார்கே கூறினார்.  

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 370 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களுக்கும் மேல் வெல்ல பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே பா.ஜ.,வின் இலக்கு.

கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம் தொடர்பாக அமித் ஷா பொய் சொல்கிறார் என்று குற்றம் சாட்டிய கார்கே, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை நிவாரணம் கேட்டு முதல்வர் சந்தித்தது பொய்யா? மத்திய குழு இங்கு வந்து ஒரு கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பது பொய்யா? அதன்பிறகு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு கூட்டத்தை நடத்தி, கர்நாடகாவின் வறட்சி மேலாண்மை முயற்சிகளை எழுத்துப்பூர்வமாக பாராட்டியது பொய்யா? அமித் ஷா ஏன் இவ்வளவு பொய் சொல்கிறார்?

பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே உரையாற்றிய அமித் ஷா, கர்நாடகாவில் வறட்சி நிலவுவதாகவும், மாநில அரசு மத்திய அரசுக்கு ஒரு திட்டத்தை அனுப்புவதில் மூன்று மாதங்கள் தாமதமாக இருப்பதாகவும், "இன்று மத்திய அரசிடமிருந்து வறட்சி நிவாரணத்திற்கான விண்ணப்பம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது" என்றும் கூறினார். 

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.