தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Bjp Manifesto: ‘நாளைக்கு இருக்கு கச்சேரி! பாஜக தேர்தல் அறிக்கை ரெடி! மோடியே வெளியிடுகிறார்!’

BJP Manifesto: ‘நாளைக்கு இருக்கு கச்சேரி! பாஜக தேர்தல் அறிக்கை ரெடி! மோடியே வெளியிடுகிறார்!’

Kathiravan V HT Tamil
Apr 13, 2024 07:34 PM IST

”அரசியல் அமைப்பு சட்டத்தை தொகுத்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாள அன்று பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளார்”

பாஜக தலைவர்களுடன் ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி
பாஜக தலைவர்களுடன் ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி (File)

ட்ரெண்டிங் செய்திகள்

"சங்கல்ப் பத்ரா" என்று பெயரிடப்பட்டுள்ள பாஜக தேர்தல் அறிக்கையில், 'விக்சித் பாரத்'க்கான ரோட் மேப்பை தவிர, நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளை முன்னிருந்த்தை அவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.  

அரசியல் அமைப்பு சட்டத்தை  தொகுத்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாள அன்று பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளார். 

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொது சிவில் சட்டம் தவிர அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370ஆவது சட்டபிரிவை ரத்து செய்வது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ள நிலையில் அடுத்த கட்ட இந்துத்துவா சார்ந்த தேர்தல் வாக்குறுதி எண்ணவாக இருக்கும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. 

பாஜக தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழுவை அமைப்பதாக கடந்த மாதம் அறிவித்தது.

இந்த குழுவில் 11 அமைச்சர்களும், கட்சி ஆளும் மாநிலங்களின் நான்கு முதல்வர்களும் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவின் அமைப்பாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். தேர்தல் அறிக்கை குழுவில் சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட ஒவ்வொரு சிறுபான்மை சமூகங்களிலிருந்தும் ஒரு பாஜக தலைவர்கள் இடம் பெற்று இருந்தனர்..

காங்கிரஸின் அறிக்கை:

சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் கொள்கைகளை வடிவமைக்க இந்தியாவின் மாறுபட்ட மக்கள்தொகையைப் பற்றிய விரிவான புரிதலைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையான நாடு தழுவிய சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பை நடத்துவதற்கான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டிய தனது தேர்தல் அறிக்கையை கட்சி முன்னதாக வெளியிட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

WhatsApp channel