Annamalai: கோவையில் இரண்டு விதமான போட்டி.. மோடிக்கும் கோவைக்கும் இணைப்பு பாலமாக இருப்பேன்.. அண்ணாமலை!
Coimbatore: கோயமுத்தூர் பொழிவை இழந்து வருவதாகவும் கமிஷன் கிடைக்கிறது என கோவைக்கு வருகிறார்கள் என கோவையில் கட்டப்பட்ட மேம்பாலத்தை சுட்டிக்காட்டினார். பாலத்திற்கு கீழ் சாலைகள் மோசமாக இருக்கிறது. மேலும் கோவையின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் எம்பியாக இருக்கிறார்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக கோவை நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தமிழ்நாடு தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கோவை மக்களின் அன்பு நம்முடன் இருக்கின்றது. இனி வரவுள்ள 25 நாட்களும் பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளோம் என்றார். கோவையில் நாம் வெற்றியை சுவைத்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது என தெரிவித்த அவர் 1998,99 இல் சிபி ராதாகிருஷ்ணன் செய்த பணிகளை கோவை மக்கள் தற்பொழுது பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இந்த தேர்தலிலும் மோடி தான் வெற்றி பெறுவார். ஆனால் 400 எம்பியா 450 எம்பியா என்பது தான் இந்த தேர்தல் எனவும் கூறினார். 2002 ஆம் ஆண்டு தான் கோவைக்கு தான் முதன்முதலாக தனது அப்பாவுடன் வந்ததாக தெரிவித்த அவர் ஒவ்வொரு நாளும் கோவை மீது அன்பும் பாசமும் தான் அதிகரித்தது.