Lok Sabha Election 2024 Results: ராமநாதபுரத்தில் கனியாத பலா.. மதுரை, தேனி, கன்னியாகுமரி தொகுதிகளின் நிலவரம் என்ன?
Lok Sabha Election 2024 Results: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இராமநாதபுரம், மதுரை, தேனி, கன்னியாகுமரி தொகுதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து பார்ப்போம்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இதனிடையே, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி 1,71,693 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் 1,03104 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அதைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 38197 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 32,081 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மதுரை மக்களவைத் தொகுதியின் தற்போதைய நிலவரம்
மதுரை மக்களவைத் தொகுதியின் தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி சார்பில், மாரக்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் 237515 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளரான ராமசீனிவாசன் 116352 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அதைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் 115037 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 50816 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தேனி மக்களவைத் தொகுதியின் தற்போதைய நிலவரம்
தேனி மக்களவைத் தொகுதியின் தற்போதைய நிலவரப்படி, அமமுக சார்பின் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 82533 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார். அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் 182435 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் நாராயண சாமி 48765 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் 24253 வாக்குகள் பெற்றுள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியின் தற்போதைய நிலவரம்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 142907 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 88420 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அதைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் 12517 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 12510 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் 2024
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
களத்தில் 950 வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்