Lok Sabha Election Results 2024 : கோவையில் திமுக முன்னிலை.. அதிமுகவை 3 ஆவது இடத்திற்கு தள்ளி அண்ணாமலை!
Lok Sabha ElectionResults 2024 :கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுகவை 3 ஆவது இடத்திற்கு தள்ளி அண்ணாமலை இரண்டாவது இடத்தில் உள்ளார்.
Lok Sabha Election Results 2024 : கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுகவை 3 ஆவது இடத்திற்கு தள்ளி அண்ணாமலை இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கோவை முன்னிலை நிலவரம்
திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 93,894 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 66, 937 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதிமு வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 37,270வாக்குகள் பெற்றநிலையில், நாம் தமிழகர் கட்சியின் வேட்பாளர் 10,506 வாக்குதல் பெற்றுள்ளா.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
களத்தில் 950 வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவிற்கு வாய்ப்பு உள்ளதா?
இந்த தேர்தலில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை கோவையில் களம் காண்கிறார். அதேபோல் அக்கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தர் ராஜன் தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த நிலையில் தனது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு மத்திய சென்னையில் போட்டியிட்டார்.
எதிர்பார்ப்பில் மக்கள்
அடுத்த 5 ஆண்டுகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆட்சி செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
உலகமே உற்று நோக்கும் இந்தியாவில் ஏற்கனவே 2 முறை ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா.. பிரதமர் மோடி 3 ஆவது முறையாக ஆட்சி அமைப்பாரா.. அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இணைந்துள்ள இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது.
கடும் போட்டி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி!
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியதாக கோயம்புத்தூர் மக்களவை தொகுதி உள்ளது.
தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கோயம்புத்தூர் மக்களவை தொகுதி உள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னதாக சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பல்லடம், திருப்பூர் ஆகிய தொகுதிகள் இருந்தன.
இதுவரை நடைபெற்றுள்ள 17 நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும். திமுக, பாஜக கட்சிகள் தலா இரண்டு முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
நல்லக்கண்ணுவை வீழ்த்திய கோவை மக்கள்!
1971ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலதண்டாயுதம் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கோவை குண்டுவெடிப்புக்கு பிறகு 1998ஆம் ஆண்டு அதிமுக உடனான கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் சுப்பையனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
1999ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நல்லக்கண்ணுவை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றார்.
முதல் நேரடி வெற்றியை பதிவு செய்த அதிமுக!
2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.நாகராஜன் 431,717 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். கோவை வரலாற்றில் நேரடியாக அதிமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றது இதுவே முதல் முறை ஆகும்.
3,89,701 33 வாக்குகளை பெற்ற பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடமும், 2,17,083 வாக்குகளை பெற்ற திமுக வேட்பாளர் கே.கணேஷ்குமார் மூன்றாம் இடமும் பெற்றனர்.
சி.பி.ராதாகிருஷ்ணனை வீழ்த்திய பி.ஆர்.நடராஜன்!
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 571,150 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.
அதிமுக கூட்டணியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர்.மகேந்திரன் 1,45,104 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.கல்யாண சுந்தரம் 60,519 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9