Lok Sabha Election 2024: 'பூட்டை உடைங்கப்பா.. சாவி தொலைஞ்சு போச்சு' வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையின் பூட்டு உடைப்பு!
Lok Sabha Election 2024 Results: அம்பா சமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதி வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் அறையின் சாவி தொலைந்து விட்டதாக அதிகாரிகள் கூறியதால் அரசியல் கட்சிகளின் முகவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பூட்டு உடைக்கப்பட்டது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெல்லையில் மின்னணு இயந்திர அறையின் சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அம்பா சமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதி வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் அறையின் சாவி தொலைந்து விட்டதாக அதிகாரிகள் கூறியதால் அரசியல் கட்சிகளின் முகவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வேறு வழி இன்றி வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ருந்த அறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு மின்னணு இயந்திரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 4 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகளை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.
எதிர்பார்ப்பில் மக்கள்
அடுத்த 5 ஆண்டுகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆட்சி செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
உலகமே உற்று நோக்கும் இந்தியாவில் ஏற்கனவே 2 முறை ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா.. பிரதமர் மோடி 3 ஆவது முறையாக ஆட்சி அமைப்பாரா.. அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இணைந்துள்ள இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது.
இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தொடங்கி கடந்த ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடைபெற்றது.
கடும் போட்டி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவிற்கு வாய்ப்பு உள்ளதா?
இந்த தேர்தலில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை கோவையில் களம் காண்கிறார். அதேபோல் அக்கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தர் ராஜன் தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த நிலையில் தனது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு மத்திய சென்னையில் போட்டியிட்டார்.
இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9