Lok Sabha Election 2024: 102 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு..தமிழ்நாடு நிலவரம் என்ன? - ரிப்போர்ட் இதோ!
Lok Sabha Elections 2024: தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தராகண்ட், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் அந்தமான் நிகோபார், லட்சத்தீவிலும் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) நடைபெற்றது.
அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் 75.67 வாக்கு சதவிகிதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
கள்ளக்குறிச்சிக்கு அடுத்தபடியாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 75.44 சதவிகிதமும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 74.87 சதவிகிதமும் வாக்குப் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு:
கள்ளக்குறிச்சி - 75.67%
தர்மபுரி - 75.44%
சிதம்பரம் - 74.87%
பெரம்பலூர் - 74.46%
நாமக்கல் - 74.29%
கரூர் - 74.05%
அரக்கோணம் - 73.92%
ஆரணி -73.77%
சேலம் - 73.55%
விழுப்புரம் - 73.49%
திருவண்ணாமலை -73.35%
வேலூர் - 73.04%
காஞ்சிபுரம் - 72.99%
கிருஷ்ணகிரி - 72.95%
கடலூர் - 72.40%
விருதுநகர் - 72.29%
பொள்ளாச்சி - 72.22%
நாகப்பட்டினம் - 72.21%
திருப்பூர் - 72.02%
திருவள்ளூர் - 71.87%
தேனி - 71.74%
மயிலாடுதுறை - 71.45%
ஈரோடு - 71.42%
திண்டுக்கல் - 71.37%
திருச்சிராப்பள்ளி - 71.20%
கோயம்புத்தூர் - 71.17%
நீலகிரி - 71.07%
தென்காசி - 71.06%
சிவகங்கை - 71.05%
ராமநாதபுரம் - 71.05%
தூத்துக்குடி - 70.93%
திருநெல்வேலி - 70.46%
கன்னியாகுமரி - 70.15%
தஞ்சாவூர் - 69.82%
ஸ்ரீபெரும்புதூர்-69.79%
வட சென்னை - 69.26%
மதுரை - 68.98%
தென் சென்னை - 67.82%
மத்திய சென்னை - 67.35%
மக்களவைத் தேர்தல் 2024:
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
950 பேர் போட்டி:
தமிழகம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும், தென் சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 6 தொகுதிகளில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்