Lok Sabha Election 2024 : அண்ணாமலை பின்னடைவை ஆட்டு பிரியாணி வழங்கி கொண்டாடிய திமுக!
Lok Sabha Election 2024 : திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட, 25,000 வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை கோட்டைமேடு மக்களுக்கு திமுக சார்பில் ஆடு பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது இரு கிடாய்களை அருகே வைத்து இருந்தனர்.
Lok Sabha Election 2024 : கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிட்டனர்.
தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது, கோவை திமுக பொறுப்பு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, பேசுகையில் "அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என கிண்டல் செய்ததுடன், திமுக வெற்றி பெற்றால் ஆடு பிரியாணி வழங்கப்படும்," என தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அமைச்சருக்கு நிறைய இடங்களில் ஆடும் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட, 25,000 வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை கோட்டைமேடு திமுக மாவட்ட துணைச்செயலாளர் தலைமையில் , விளையாட்டு மேம்பாட்டு அணி தொண்டர்கள் சார்பாக, அப்பகுதி மக்களுக்கும் ஆடு பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது இரு கிடாய்களை அருகே வைத்து இருந்தனர்.
ஜனநாயக திருவிழாவின் கள நிலவரம்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 4 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகளை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த முறை யார்?
2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதி மிகவும் உற்றுநோக்கப்படும் தொகுதியாக மாறி இருந்தது. தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதை முன்கூட்டியே கணித்து இருந்த திமுக, கம்யூனிஸ்ட் வசம் இருந்த கோவை தொகுதியை தன் வசப்படுத்தி கோவைக்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கியது.
அதிமுக சார்பில் முன்னாள் மேயராக இருந்த முனைவர் கணபதி ராஜ்குமாரை திமுக வேட்பாளராக களம் இறக்கி உள்ளது. மேலும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக டி.ஆர்.பி.ராஜாவை நியமித்துள்ளது.
வேலுமணியால் கட்டம் கட்டப்பட்ட கணபதி ராஜ்குமாரை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிதான் திமுகவுக்கு கொண்டு வந்தார். கோவை வேட்பாளர் தேர்வில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் பரிந்துரை இருந்ததாக கூறப்படுகிறது.
அதிமுக வேட்பாளராக முன்னாள் சிங்கை எம்.எல்.ஏ கோவிந்தராஜன் மகனான சிங்கை ராமச்சந்திரனை எடப்பாடி பழனிசாமி களம் இறக்கி உள்ளார். அகமதாபாத் ஐஐஎம்மில் மேலாண்மை பட்டம் பெற்ற சிங்கை ராமச்சந்திரன், அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியாக உள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி வேட்பாளராக சீமானால் நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக சார்பில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் ‘I AM WAITING’ என ட்வீட் செய்து கவனம் ஈர்த்தார்.
இந்த நிலையில் இன்று அண்ணாமலையின் பிறந்தநாள் இந்த நாளில் அவர் காத்திருந்த வெற்றியை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தற்போது கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 39,013 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாவது இடத்தில் உள்ளார். இதை கொண்டாடும் விதமான திமுகவினர் ஆட்டு பிரியாணி வழங்கி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்