HT MP Story: ’ஒருங்கிணைந்த சென்னை ம.செ முதல் திமுகவின் டெல்லி முகம் வரை!’ சாதித்ததும்! சொதப்பியதும்! யார் இந்த எம்.பி
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ’ஒருங்கிணைந்த சென்னை ம.செ முதல் திமுகவின் டெல்லி முகம் வரை!’ சாதித்ததும்! சொதப்பியதும்! யார் இந்த எம்.பி

HT MP Story: ’ஒருங்கிணைந்த சென்னை ம.செ முதல் திமுகவின் டெல்லி முகம் வரை!’ சாதித்ததும்! சொதப்பியதும்! யார் இந்த எம்.பி

Kathiravan V HT Tamil
Mar 13, 2024 06:00 AM IST

”TR Baalu's Political Journey: திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால கனவுத்திட்டமன சேது சமுத்திர திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தும் தளகர்த்தர்களில் டி.ஆர்.பாலு முக்கியமானவராக இருந்தார்”

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு (PTI)

தமிழ்நாட்டில் வெற்றி பெற்று வயதிலும், அனுபவத்திலும் மிக மூத்த எம்பியாக உள்ள தளிக்கோட்டை ராசுத் தேவர் பாலு என்ற டி.ஆர்.பாலு திமுகவின் டெல்லி முகமாக அறியப்படுகிறார். 

1941ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டை கிராமத்தில் டி.ஆர்.பாலு பிறந்தார். பிற்படுத்தப்பட்ட விவசாய குடும்பத்தில் பிறந்த டி.ஆர்.பாலுவுக்கு டெல்டா பகுதியில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகள் அவரது அரசியல் குறித்த புரிதல்களுக்கு தொடக்கமாக அமைந்தது. 

டெல்டா பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர் விட்டு வளரத் தொடங்கிய காலம் அது.  தனது பள்ளி ஆசிரியர் மூலம் சுயமரியாதை கருத்துக்களும், தனித்தமிழின் அவசியம் குறித்தும் எடுத்து சொல்லப்பட்ட கருத்துகளும் டி.ஆர்.பாலுவின் பார்வையை திராவிட இயக்கம் நோக்கி நகர்த்தியது. 

தனது கிராமத்திற்கு அருகில் உள்ள உள்ளிக்கோட்டைக்கு வந்த கலைஞர் கருணாநிதியின் பேச்சை கேட்ட டி.ஆர்.பாலு தனது 16 வயதில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 

சென்னை புதுக்கல்லூரியில் பிஎஸ்சியும், தரமணி பாலிடெக்னிக்கில் டிப்ளமோ பட்டமும் பெற்ற பாலு, பொதுப்பணி துறை சார்ந்த அலுவல் பணிகளில் இருந்தார். 1970களின் பிற்பகுதியில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமானவராக ஆனார். எமர்ஜென்சி காலத்தில் இருந்த நெருக்கம் மேலும் அதிகரித்தது. 

எமர்ஜென்சி கால சிறை வாசத்திற்கு பின் டி.ஆர்.பாலுவின் வளர்ச்சி வேகம் பெற்றது. 1982ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளர் ஆனார். 1986ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கடும் சவால்களுக்கு மத்தியில் எம்பியாக பாலு தேர்வானார். டி.ஆர்.பாலுவின் வெற்ற அன்றைய முதல்வர் எம்ஜிஆருக்கு அதிர்ச்சி தருவதாக அமைந்தது. 

90களுக்கு பிறகு டி.ஆர்.பாலுவின் அரசியல் வளர்ச்சி ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. 1996ஆம் ஆண்டு தேர்தலில் தென் சென்னை தொகுதியில் வென்ற பாலு, ஐக்கிய முன்னணி அரசில் பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ஆனார். 1998 மற்றும் 1999 தேர்தல் வென்ற பாலு, வாஜ்பாய் அமைச்சர் அவையில் கேபினெட் அந்தஸ்து பெற்ற வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆனார். 

2004ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசியல் சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துறை அமைச்சராகவும் டி.ஆர்.பாலு பொறுப்பு வகித்தார். 

இவர் இத்துறைக்கு அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் சென்னையில் உள்ள கத்திபாரா மேம்பாலம், கோயம்பேட்டில் உள்ள மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பால திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் விரிவுசெய்யப்பட்டன. 

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால கனவுத்திட்டமன சேது சமுத்திர திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தும் தளகர்த்தர்களில் டி.ஆர்.பாலு முக்கியமானவராக இருந்தார். 

2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வென்ற பாலு, மன்மோகன் சிங் அமைச்சர் அவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி தரப்படாதது பேசு பொருள் ஆனது.  முந்தைய நாட்களில் டி.ஆர்.பாலுவின் செயல்பாடுகள் குறித்த விமர்சனத்தை இது ஏற்படுத்தியது. 

2014ஆம் ஆண்டு தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற பாலு, 2019 தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நின்று வென்றதுடன் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட தயார் ஆகி வருகிறார்.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.