CM MK Stalin Campaign: ஈரோடு மார்க்கெட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர்..ஷாக்கான பொதுமக்கள்!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Cm Mk Stalin Campaign: ஈரோடு மார்க்கெட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர்..ஷாக்கான பொதுமக்கள்!

CM MK Stalin Campaign: ஈரோடு மார்க்கெட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர்..ஷாக்கான பொதுமக்கள்!

Karthikeyan S HT Tamil
Mar 31, 2024 10:14 AM IST

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக இன்று காலை வாக்கு சேகரித்தார்.

ஈரோட்டில் நடைபயிற்சி செய்தபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஈரோட்டில் நடைபயிற்சி செய்தபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதைத்தொடர்ந்து இன்று காலை ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சம்பத் நகர் வழியாக உழவர் சந்தைக்கு வந்த முதல்வர் நடந்து சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம் ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களின் குறைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது முதல் அமைச்சருடன் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் (ஜோதிமணி), கொமதேக (மாதேஸ்வரன்) வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

நான்கு முனை போட்டி

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளிலும் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீதியுள்ள 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ தலா 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.

ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.