Modi On Drugs: ’தமிழ்நாட்டில் தடையின்றி போதை பொருள் கிடைப்பது என் மனதை அரிக்கிறது!’ மோடி கவலை!
”நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால் தமிழ்நாட்டின் எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடியின் கியாரண்டி என பிரதமர் பேச்சு”

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
வணக்கம் சென்னை என்று கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் தொடர்ந்து பேசுகையில் தமிழ்நாட்டில் சிலநாட்களுக்கு முன்னர் பசுமை ஹைட்ரஜன் மூலம் இயங்கும் கலன் தொடங்கப்பட்டது, உத்தரப்பிரதேசத்தின் மீரட்டிலும் இப்படி ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி மக்களுக்கு இலவச மின்சாரம் தரும் பிஎம் சூர்யகர் திட்டம் தொடங்கபபட்டுள்ளது. இதில் மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டாம், வெறும் இந்த கருவிகளை பொறுத்தினால் மட்டும்போது, உபரி மின்சாரத்தை அரசே வாங்கிக்கொள்ளும். இந்த திட்டத்திற்கு 75 ஆயிரம் மோடி செலவு செய்யப்பட உள்ளது. மின்சாரத்தோடு இணைந்த பல திட்டங்கள் பாரத்தை மின்சக்தி துறையில் தன்னிறைவு பெற்றதாக இருக்கும். இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் இருக்கும்.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் உள்ள இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் குடும்பத்திற்கே முதல் உரிமை என்று சொல்கின்றனர். ஆனால் தேசத்திற்கே முதல் உரிமை என மோடி நான் சொல்கின்றேன்.
’மோடிக்கு குடும்பம் கிடையாது’ என இந்தி கூட்டணியை சேர்ந்தவர்கள் என்னை வசை பாட புதிய ஃபார்முலாவை கண்டுபிடித்துள்ளனர். எனக்கு 16 வயதான போது வீட்டை துறந்து வெளியேறினேன். எதற்காக வெளியேறினேன்; எனது தேசத்திற்காக வெளியேறினேன். எனதருமை மக்களே நீங்கள்தான் என்னுடைய குடும்பம், பாரத நாட்டின் மக்கள்தான் எனது குடும்பத்தார். அவர்கள் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமானதாக்க இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகிறேன்.
யாருமே இல்லாதவர்களுக்கு, யார் அனாதைகளோ, யாருக்கு யாருமே இல்லையோ அவர்களும் இந்த மோடியை சேர்ந்தவர்கள்தான், அவர்களும் மோடிக்கு சொந்தமானவர்கள்தான். ஆகையால்தான் இன்று தேசம் முழுவதும் ஒரே குரலில் நான் மோடியின் குடும்பத்தை சேர்ந்தவன் என்று கூறுகிறது.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தி கூட்டணியில் உள்ள கட்சிகள் ஊழல், வாரிசு அரசியலில் ஊறிப்போய் உள்ளன. அதில் உள்ள ஊழல் தலைவர்களை பொத்தி பொத்தி பாதுகாக்கும் தீர்மானத்தை உச்சநீதிமன்றம் இன்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. இந்த தீர்பால் கப்பல் கவிந்துவிட்டது போல் இந்தி கூட்டணியினர் தலையில் கை வைத்து கொண்டு உள்ளனர்.
இந்தி கூட்டணியினருக்கு ஊழல் செய்வதை தவிர வேறு ஒன்றுமே தெரியாது. இவர்களால்தான் தேசத்தின் இளைஞர்கள் அரசியல் மீதும் அமைப்புகள் மீதும் வெறுப்பு அடைந்துள்ளனர்.
கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கையை அவமானம் செய்வது கூட குடும்ப அரசியல் செய்பவர்களின் லட்சியம். அவர்களின் அகங்காரத்தால் மக்கள் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காத ஒருவர் தமிழ்நாடு அரசின் முக்கிய பதவியில் இடம்பெற்று உள்ளார்.
என்னுடைய கவலை தமிழ்நாட்டை சேர்ந்த பல பெற்றோர்கள் மனதில் உள்ளது என்பது எனக்கு தெரியும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில், தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தங்கு தடையின்றி அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது என்பதுதான் எனது மனதை அரித்து எடுக்கும் கவலையாக உள்ளது. உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இப்படிப்பட்ட கட்சி குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமானது. இன்றைய குழந்தைகள் மட்டும் அல்ல; நாளைய தலைமுறையும் இதனால் பாதிக்கப்படும். நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால் தமிழ்நாட்டின் எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடியின் கியாரண்டி ஆகும்.
டெல்லியில் குளர்சாதான் அறைகளில் அமர்ந்திருக்கும் சிலருக்கு இந்த காட்சி தமிழ்நாடு பாஜகவில் இணைந்துவிட்டது என நடுங்கிபோவார்கள் என பிரதமர் மோடி பேசினார்.
