Assembly Elections 2023: சத்தீஸ்கர், மிஸோரம் தேர்தல்-வாக்குப் பதிவு நிலவரம்
Mizoram Assembly Elections 2023: மிஸோரம், சத்தீஸ்கரில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது.

மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த முதியவர் (ANI Photo) (ECI SVEEP )
மிஸோரமில் 40 சட்டசபை தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு முதல்கட்டமாகவும் சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. சத்தீஸ்கரில் நக்ஸல் பாதிப்பு பகுதியில் பதற்றம் நிலவியது.
மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை 8.57 லட்சம் வாக்காளர்களில் 69 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிசோரமில் மாலை 5 மணி நிலவரப்படி 75.88% வாக்குகள் பதிவாகியுள்ளன.
