Annamalai: ‘I AM WAITING’ என்ற அண்ணாமலை பிறந்த நாளில் சாதிப்பாரா' கோவை தரும் பரிசு என்ன.. ஆர்வத்தில் பாஜக தொண்டர்கள்
HBD Annamalai: பாஜக சார்பில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் ‘I AM WAITING’ என ட்வீட் செய்து கவனம் ஈர்த்தார். அந்த நிலையில் காத்திருந்த அவருக்கு வெற்றிக்கனி பிறந்த நாளில் சாத்தியமா என இன்று தெரியவரும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் கோவையில் களம் கண்ட அண்ணாமலை பிறந்த நாளில் வேட்பாளராக வெற்றி பெற்று 'வாகை சூடுவாரா' என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் பிறந்தநாள் பரிசாக கோவையில் வெற்றி சாத்தியமா என்பது இன்று பிற்பகலில் ஓரளவு உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக சார்பில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் ‘I AM WAITING’ என ட்வீட் செய்து கவனம் ஈர்த்தார். அந்த நிலையில் காத்திருந்த அவருக்கு வெற்றிக்கனி பிறந்த நாளில் சாத்தியமா என இன்று தெரியவரும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
