தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Election Survey 2024: டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக்கணிப்பு - 64 விழுக்காடு பேர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க விருப்பம்

Election Survey 2024: டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக்கணிப்பு - 64 விழுக்காடு பேர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க விருப்பம்

Marimuthu M HT Tamil
Apr 16, 2024 07:23 PM IST

டெய்லி ஹன்ட்டின் ஆன்லைன் வாக்கெடுப்பில் 77 லட்சம் குரல்கள் பங்கேற்றுள்ளன. தேசிய நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் தலைமை குறித்து 63.6% பேர் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக் கணிப்பு - 64 விழுக்காடு பேர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க விருப்பம்
டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக் கணிப்பு - 64 விழுக்காடு பேர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க விருப்பம்

ட்ரெண்டிங் செய்திகள்

 "Trust of the Nation 2024"என்ற பெயரில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் முக்கிய பிராந்திய மொழிகள் உட்பட 11 மொழிகளில் Dailyhunt, தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தியது. 

77 லட்சத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்களிடமிருந்து இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் கணிக்கப்பட்டுள்ளன. இது 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் மதிப்புமிக்க நுண்ணறிவான கருத்துக் கணிப்பாகும். 

தற்போதைய அரசாங்கத்தைப் பற்றிய பொதுமக்களின் கருத்தைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்ட இந்த ஆய்வில் 61 விழுக்காடு பேர், தற்போதைய நிர்வாகத்தில் திருப்தியை வெளிப்படுத்தினர். 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை தான் மீண்டும் அமையும் என 63% பேர் நம்புகிறார்கள் என கருத்துக் கணிப்பில் அம்பலமாகியிருக்கிறது. 

2024 தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின் முக்கிய முடிவுகள் பின்வருமாறு: 

  • ஐந்தில் மூன்று பேர் (64%) பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு ஆதரவாக உள்ளனர். பதிலளித்தவர்களில் 21.8% பேர் ராகுல் காந்திக்கு ஆதரவாக உள்ளனர்
  • கிட்டத்தட்ட பதிலளித்த மூன்று பேரில் இருவர் (63%) வரவிருக்கும் தேர்தலில் BJP/NDA கூட்டணி வெற்றி பெறும் எனத்தெரிவித்துள்ளனர். 
  • டெல்லியில் பிரதமர் மோடியின் பெயருக்கு 57.7% வாக்குகள் கிடைக்கும் என்றும்; ராகுல் காந்தியால் 24.2%  வாக்குகள் கிடைக்கும் என்றும்; யோகி ஆதித்யநாத்துக்கு 13.7% விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 
  • உத்தரப் பிரதேசத்தில், இந்த ஆண்டுத் தேர்தலில் 78.2% வாக்குகள் பிரதமர் மோடிக்காக விழுகும் என்றும், ராகுல் காந்திக்கு 10% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 
  • மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்காக 62.6% வாக்குகள் கிடைக்கும் என்றும், ராகுல் காந்திக்கு 19.6% வாக்குகள் கிடைக்கும் என்றும், மம்தா பானர்ஜிக்கு 14.8% வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 

தென் மாநிலங்களில், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் மிக நுணுக்கமாக உள்ளது:

▪ தமிழகத்தில், ராகுல் காந்தியின் முகத்துக்கு 44.1% ஆதரவுடன் முன்னிலை வகிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு 43.2% மட்டுமே ஆதரவு உள்ளது.

▪ இருப்பினும், கேரளாவில் கடுமையான போட்டி தெரிகிறது. பிரதமர் மோடிக்கு 40.8% விழுக்காடு வாக்குகளும், ராகுல் காந்திக்கு 40.5% விழுக்காடு வாக்குகளும் கிடைக்கும் எனத் தெரிகிறது. 

▪ தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 60.1% விழுக்காடு ஆதரவும், ராகுல் காந்திக்கு 26.5 விழுக்காடு ஆதரவும், சந்திரசேகர் ராவுக்கு 6.6% ஆதரவு கிடைத்து பின் தங்கியுள்ளார்.

▪ ஆந்திராவில் பிரதமர் மோடிக்கு  71.8% ஆதரவு கிடைத்துள்ளது. ராகுல் காந்தி 17.9% ஆதரவு கிடைத்துள்ளது என்றும், என். சந்திரபாபு நாயுடுவுக்கு 7.4% விழுக்காடு மட்டுமே ஆதரவு கிடைத்துள்ளது என்றும் டெய்லி ஹண்ட் கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது. 

நிர்வாகம் மற்றும் பொருளாதார முன்னேற்றம்:

  • பதிலளித்தவர்களில் ஐந்தில் மூன்றில் ஒரு பகுதியினர் (61%)நடப்பு நிர்வாகத்துக்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளனர். பிரதமர் மோடி நிர்வாகத்தின் செயல்பாடுகளில் 21% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
  • கருத்துக் கணிப்புக்குப் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (53.3%) பிரதமர் மோடி அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகத்தை 'மிகவும் சிறப்பாக' மதிப்பிடுகின்றனர். அதே நேரத்தில் 20.9% பேர் இது 'சிறந்ததாக இருக்கும்' என்று நம்புகிறார்கள்.
  • மேற்கு, கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில், 63% மக்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் திருப்தி அடைந்துள்ளனர். இந்தியாவின் தெற்கில் 55% மக்கள் மட்டுமே இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
  • ஒவ்வொரு பத்துபேரில் ஆறு பேர் (60%), 'மிகவும் மகிழ்ச்சியாக' இருப்பதாகக் கூறியுள்ளனர். பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 
  • பிரதமர் மோடியின் தலைமையிலான அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில், பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள்(52.6%),ஆழ்ந்த திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 28.1% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வெளியுறவுக் கொள்கை:

பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு (64%) பிரதமர் மோடி அரசாங்கத்தின் வெளியுறவு விவகாரங்களைக் கையாளுவதற்கு 'மிகவும் நல்ல' மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். அதே நேரத்தில் 14.5% பேர் இது 'சிறந்ததாக இருக்கும்' என்று நம்புகிறார்கள்.

நெருக்கடியைக் கையாளுதல்:

கணிசமான 63.6% பேர் தேசிய அவசர காலங்களில் பிரதமர் மோடி வழங்கிய தலைமையால் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் 20.5% பேர் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கிறார்கள் மற்றும் 10.7% பேர் நடுநிலை பதிலைக் கூறியுள்ளனர்

நல முயற்சிகள்:

மத்திய அரசின் நலத்திட்டங்களால் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (53.8%) கணிசமான திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும்,  24.9% மகிழ்ச்சியற்ற நிலையில் இருப்பதாகவும் பதிலளித்துள்ளனர். 

கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட விதம்:

● DailyHuntஆல் நடத்தப்பட்ட விரிவான ஆன்லைன் தேர்தல் கருத்துக் கணிப்புகள், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் 11 முக்கிய பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டுள்ளது.

● மக்கள்தொகையில் 77 லட்சத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்களின் மாறுபட்ட தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. 

● தேர்தல் கருத்துக் கணிப்புக்கு பதிலளித்தவர்கள் பல்வேறு வயது உடையவர்களாகவும் (18-24, 25-34 மற்றும் 35+ வயது), பல்வேறு பாலினம் மற்றும் பல்வேறு தொழில்களில் இருப்பவர்களாகவும் இருந்தனர். 

● பொருளாதார மேலாண்மை, வெளியுறவுக் கொள்கை, நெருக்கடியைக் கையாளுதல், நல முயற்சிகள் மற்றும் நிர்வாகத்தின் பிற அம்சங்கள் போன்றவற்றில் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்த பொதுமக்களின் கருத்தை மதிப்பிடுவதற்காக ஆய்வுக் கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

WhatsApp channel

டாபிக்ஸ்