Ind vs Zim 1st T20 Result: மூன்று பேர் டக் அவுட்..! சரிந்த இந்தியா பேட்டிங் வரிசை - ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Zim 1st T20 Result: மூன்று பேர் டக் அவுட்..! சரிந்த இந்தியா பேட்டிங் வரிசை - ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே

Ind vs Zim 1st T20 Result: மூன்று பேர் டக் அவுட்..! சரிந்த இந்தியா பேட்டிங் வரிசை - ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 07, 2024 05:19 PM IST

இந்திய அணியில் மூன்று பேர் டக் அவுட் ஆக, ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே பவுலர்களால் பேட்டிங் வரிசை சரிந்தது. கடைசி வரை வாஷிங்டன் சுந்தர் ஒற்றை ஆளாக போராடியபோதிலும் டி20 சாம்பியன் ஆன பிறகு களமிறங்கிய முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்துள்ளது.

மூன்று பேர் டக் அவுட், சரிந்த இந்தியா பேட்டிங் வரிசை, ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே
மூன்று பேர் டக் அவுட், சரிந்த இந்தியா பேட்டிங் வரிசை, ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே (AP)

சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திரா ஜடேஜா ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், மற்ற முக்கிய வீர்ரகளான சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரீத் பும்ரா உள்பட டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்தியா அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கியது

இந்தியா பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கிளைவ் மடாண்டே 29, டியான் மியர்ஸ் 23, பிரையன் பென்னட் 22 ரன்கள் அடித்தனர்.

இந்திய பவுலர்களில் ரவி பிஷ்னோய் 4, வாஷிங்டன் சுந்தர் 2, ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஸ்பின் கூட்டணியான பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 8 ஓவரில் 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்தியா சேஸிங்

பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாக இருந்த இந்த பிட்சில் சேஸிங்கில் களமிறங்கிய இந்தியா 19.5 ஓவரில் 102 ரன்கள் அடித்து ஆல்ஆவுட் ஆகியுள்ளது. இதனால் ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 31, வாஷிங்டன் சுந்தர் 27, ஆவேஷ் கான் 16 ரன்கள் அடித்தனர். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதாக பங்களிப்பு தரவில்லை.

ஜிம்பாப்வே பவுலர்களில் பந்து வீசிய அனைவரும் விக்கெட்டுகள் வீழ்த்தினர். சிகந்தர் ராசா 3, தென்டாய் சத்தாரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிளெசிங் முசரபானி, லூக் ஜாங்வே, வெலிங்டன் மசகட்சா, பிரையன் பென்னட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள்

இந்திய அணியின் கேப்டன சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் மட்டும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடித்தனர். ஜிம்பாப்வே பவுலர்களின் துல்லிய பந்து வீச்சுக்கு எதிராக ரன் அடிக்க மிகவும் சிரமம் அடைந்தனர்.

ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங்கில் அதிரடியில் மிரட்டிய அபிஷேக் ஷர்மா தனது அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு அறிமுக வீரரான ரியான் பிராக் 2 ரன் மட்டும் எடுத்தார். இந்தியாவுக்காக முதல் டி20 போட்டியில் களமிறங்கிய துருவ் ஜுரல் நிதானத்தை கடைப்பிடித்த போதிலும் 6 ரன்னில் வெளியேறினார்.

இந்திய இன்னிங்ஸில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் மட்டும் அடிக்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் கடைசி ஓவர் வரை போராடியபோதிலும் அணிக்கு வெற்றியை தேடி தரமுடியவில்லை

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.