Yuzvendra Chahal: மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய யுஸ்வேந்திர சஹல் முடிவா?-வைரலாகி வரும் வீடியோ
தனஸ்ரீ வர்மாவுடனான பிரிவு குறித்த வதந்திகளைத் தொடர்ந்து, யுஸ்வேந்திர சாஹல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வலுவான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் லெக்-ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல், நடன இயக்குனர் மற்றும் இணைய பிரபலமான தனஸ்ரீ வர்மாவுடனான தனது திருமணத்தை முறித்துக் கொள்ள உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. தம்பதியருக்கு நெருக்கமான வட்டாரங்களின் கூற்றுப்படி, நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
சஹலுக்கும் தனஸ்ரீக்கும் இடையிலான உறவில் பல மாதங்களாகவே விரிசல் ஏற்பட்டுள்ளது குறித்து வதந்திகள் பரவி வருகின்றன, ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா, கடந்த மூன்று மாதங்களாக தம்பதியினர் தனித்தனியாக வாழ்ந்து வருவதால், திருமணம் முறிவின் விளிம்பில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வதந்திகளுக்கு மேலும் எரியூட்டும் வகையில், சஹல் தனது திருமணம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைக் குறிப்பிடுவதாகக் கருதப்படும் ஒரு மர்மமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை வெளியிட்டுள்ளார்.
