HBD Virat Kohli: விராட் கோலியின் 35வது பிறந்தநாளில் இதயப்பூர்வமான வாழ்த்தை கூறிய முன்னாள் வீரர்
இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் எழுதியுள்ள பதிவில், “ரெக்கார்டுகளை முறியடித்து சாதனை படைத்த மற்றொரு ஆண்டை நீங்கள் கொண்டாடும் போது, நீங்கள் சாதித்த அனைத்தையும் சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்”
விராட் கோலிக்கு இன்று 35 வயதாகிறது, மேலும் அவருக்கு மக்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். யுவராஜ் சிங்கும், கிரிக்கெட் வீரரின் பிறந்தநாளில் மனதைக் கவரும் பதிவைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்தபோது கோலி எப்படி 'செயல்பட வேண்டும் என்ற பசியுடன்' இருந்தார் என்பதையும், அவர் எப்படி 'தனக்கென ஒரு முத்திரையை' பதிக்க முடிந்தது என்பதையும் நினைவுபடுத்தினார். கோலியின் ‘வலிமை டூ வலிமை’ பயணத்தை நேரில் கண்ட பெருமையையும் அவர் பகிர்ந்தார்.
“வாய்ப்புகளுக்காக ஆவலுடனும் கிரிக்கெட் பசியுடனும் இருக்கும் இளைஞனாக நீங்கள் அணியில் சேர்ந்தபோது, நீங்கள் மகத்துவத்திற்கு விதிக்கப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. நீங்கள் உங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளீர்கள், ஆனால் எண்ணற்ற மற்றவர்களை சிறந்து விளங்குவதற்கு ஊக்குவித்திருக்கிறீர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார் யுவராஜ் சிங். கோலியுடன் இருக்கும் சில படங்களையும் பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் இருவரும் பகிர்ந்து கொண்ட பல தருணங்களை படங்கள் காட்டுகின்றன.
அவர் மேலும் கூறுகையில், “நீங்கள் சாதனைகளை முறியடித்து சாதனை படைத்த மற்றொரு ஆண்டைக் கொண்டாடும் போது, நீங்கள் சாதித்த அனைத்தையும் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். இந்த நம்பமுடியாத பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பெருமை அடைகிறேன், உங்களின் ஆர்வமும் உறுதியும் தொடர்ந்து உங்களையும் இந்திய அணியையும் உலகக் கோப்பையில் புதிய உயரத்திற்கு அழைத்துச் சென்று நம் தேசத்தை மீண்டும் பெருமைப்படுத்தட்டும். கிங்கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு இரண்டு மணி நேரத்திற்கு முன் பகிரப்பட்டது. அதன் பின்னர் நான்கு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது, மேலும் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது.
ரசிகர்களின் கருத்துக்கள் சில இங்கே:
இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், “கிரிக்கட் கிங் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், "சேஸ் மாஸ்டர்" என்று கூறினார்.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா. 19ஆம் தேதி உலகக் கோப்பையை கைப்ற்றுவீர்கள் என்று நம்புகிறேன்” என்று மூன்றாமவர் தெரிவித்தார்.
மற்றொரு ஒருவர், “அவர் யுவியை பெருமைப்படுத்தினார். எல்லா காலத்திலும் சிறந்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ”
"அவர்களுக்கிடையேயான பிணைப்பு இது," மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்