WPL 2025 Final: ஹர்மன்ப்ரீத் அதிரடி.. மும்பை இந்தியன்ஸ் ரன் குவிப்பு.. டெல்லி கேபிடல்ஸ்க்கு சவால் இலக்கு
WPL 2025 Final: ஹர்மன்ப்ரீத், பிரண்ட் மட்டும் அதிரடி காட்டி மற்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இருப்பினும் 149 ரன்கள் குவித்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஹர்மன்ப்ரீத் அதிரடி.. மும்பை இந்தியன்ஸ் ரன் குவிப்பு.. டெல்லி கேபிடல்ஸ்க்கு சவால் இலக்கு
டபிள்யூபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டி டெல்லி கேபிடல்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது டபிள்யூபிஎல் மூன்று சீசன் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து சீசன்களிலும் இறுதிபோட்டிக்கு நுழைந்திருக்கும் அணியாக டெல்லி கேபிடல்ஸ் இருந்து வருகிறது. இதில் இரண்டு முறை ரன்னர் அப் ஆகியுள்ளது. அந்த வகையில் ஹாட்ரிக் முறையாக இறுதிப்போட்டிக்கு வந்திருக்கும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் இந்த முறை விட்டத்தை பிடிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
டபிள்யூபிஎல் முதல் சீசனில் இறுதிப்போட்டிக்கு நுழைந்து முதல் சாம்பியன் என்ற பட்டத்தை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி உள்ளது. இதையடுத்து இரண்டாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் போட்டி இறுதிக்கு நுழைந்துள்ளது.
