டபிள்யூபிஎல் 2025: ஆர்சிபி வீராங்கனை ரிச்சா கோஷின் அதிரடி வீண்.. யு.பி.வாரியர்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
டபிள்யூபிஎல் 2025: மகளிர் தினத்தில் நடந்த இந்த மேட்ச்சில் யு.பி.வாரியர்ஸ் அதிரடி காட்டியது. இந்த அணி 225 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்தது. டபிள்யூபிஎல் வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

டபிள்யூபிஎல் 2025: 20 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஸ்மிருதி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி. ஆனால், அந்த அணியால் 213 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த மேட்ச்சில் யு.பி. வாரியர்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. யு.பி.வாரியர்ஸ் ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்டது. இன்றைய மேட்ச்சில் தோற்றதன் மூலம், ஆர்சிபியும் இந்த சீசனில் எலிமினேட் ஆனது. ஆர்சிபி நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி மும்பையுடன் 11ம் தேதி ஒரு ஆட்டத்தில் மோதுகிறது. அது சம்பிரதாய ஆட்டமாக ஆர்சிபிக்கு இருக்கும்.
முன்னதாக, இந்த மேட்ச்சில் டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய யு.பி. வாரியர்ஸ் 225 ரன்களை குவித்தது. லக்னோவில் கடைசி லெக் ஆட்டம் இதுவாகும். இன்றிரவு 7.30 மணிக்கு மேட்ச் தொடங்கியது.
யு.பி.வாரியர்ஸ் தரப்பில் தொடக்க வீராங்கனையாக களம் புகுந்த ஜார்ஜியா வோல் 17 ஃபோர்ஸ், 1 சிக்ஸரை விளாசினார். மற்றொரு வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
ஜார்ஜியா வோல் அதிரடி ஆட்டம்
ஜார்ஜியா வோல் 56 பந்துகளில் 99 ரன்களை குவித்தார். இன்னும் 1 ரன் எடுத்திருந்தால் சதம் விளாசி இருப்பார். ஆனால், கடைசி நேரத்தில் அது நடக்காமல் போனது. அவர் நாட் அவுட்டாக இருந்தார். மகளிர் தினத்தில் நடந்த இந்த மேட்ச்சில் யு.பி.வாரியர்ஸ் அதிரடி காட்டியது. இந்த அணி 225 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்தது. டபிள்யூபிஎல் வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதிகபட்ச ஸ்கோர் என்ற ரெக்கார்டுடன் அதிக ஃபோர்ஸையும் விளாசிய மேட்ச்சாக இந்த ஆட்டம் யு.பி. வாரியர்ஸுக்கு அமைந்தது.
யு.பி. வாரியர்ஸின் கிரன் நவ்கிரே 16 பந்துகளில் 46 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். எக்லெஸ்டோன் 13 ரன்களில் நடையைக் கட்டினார். கேப்டன் தீப்தி சர்மா 1 ரன் எடுத்து ரன் அவுட்டானார். இவ்வாறாக, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை குவித்தது யு.பி.வாரியர்ஸ்.
போராடி தோல்வி கண்ட ஆர்சிபி
சேஸிங் செய்ய வந்த ஆர்சிபி மகளிர் அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மேகனா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி தொடக்கத்தை தந்தாலும் விக்கெட்டை ஒருபக்கம் இழந்து கொண்டே இருந்தது ஆர்சிபி. அதிரடி வீராங்கனை எல்லீஸ் பெர்ரியும் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் வெளியேறியதும் சற்றே நம்பிக்கை போனாலும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடி காட்டி நம்பிக்கை கொடுத்தார். ஆனால், அவருடன் ராகவி களத்தில் இருக்காமல் 14 ரன்களில் நடையைக் கட்டினார். ரிச்சா கோஷுடன் கனிகா இருப்பார் என நம்பியபோதிலும் அவரும் 8 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அரை சதம் விளாசிய ரிச்சா கோஷ் 69 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு பெரிய ஷாட்டை முயற்சி செய்து கேட்ச் ஆனார்.
பின்னர் வேரமும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டீன் 9 ரன்களில் நடையைக் கட்டினார். ஆனால் யாரும் எதிர்பாராத வேளையில் சினே ராணா அதிரடி காட்டினார். 19வது ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார் ராணா. இவர் 6 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி ஓவரில் ரேணுகா ரன் அவுட்டானார். இதனால், ஆர்சிபி 19.3 ஓவர்களில் 213 ரன்களை எடுத்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது யு.பி.வாரியர்ஸ்.
நாளை டபிள்யூபிஎல் மேட்ச் இல்லை. 10ம் தேதி மும்பை, குஜராத் இடையே மும்பையில் மேட்ச் நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து 11 ம் தேதி ஆர்சிபியுடன் மும்பை இந்தியன்ஸ் மோதுகிறது.

டாபிக்ஸ்