டபிள்யூபிஎல் 2025: குஜராத்தை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி!
டபிள்யூபிஎல் 2025: டாஸ் ஜெயித்த குஜராத் அணி, மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை, 20 ஓவர்களில் 213 ரன்களை எடுத்தது.

டபிள்யூபிஎல் 2025: குஜராத்தை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி! (PTI)
டபிள்யூபிஎல் 2025: குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் எலிமினேட்டர் போட்டியில் நாட் ஸ்கிவர்-பிரன்ட், ஹேலி மேத்யூ ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. 214 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் குஜராத் தோற்று வெளியேறியது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் வரும் சனிக்கிழமை டெல்லி கேபில்ஸை பைனலில் எதிர்கொள்கிறது மும்பை.
முன்னதாக, டாஸ் ஜெயித்த குஜராத் பவுலிங்கை தேர்வு செய்தது.
சற்று நிதானமான பவர்பிளேவுக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை ஸ்கிவர்-பிரன்ட் (41 பந்துகளில் 77 ரன்கள்) மற்றும் மேத்யூஸ் (50 பந்துகளில் 77 ரன்கள்) ஆகியோர் ஜெயண்ட்ஸ் தாக்குதலுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.