டபிள்யூபிஎல் 2025: முதல் முறையாக எலிமினேட்டர் போட்டி.. 6 தொடர் தோல்வி! மும்பைக்கு பலத்த அடி தரும் முனைப்பில் குஜராத்
டபிள்யூபிஎல் 2025: கடந்த 4 நாள்களில் மூன்றாவது போட்டியில் களமிறங்குகிறது மும்பை இந்தியன்ஸ். முதல் முறையாக எலிமினேட்டரில் களமிறங்கும் குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை அணிக்கு எதிராக பெற்ற 6 தொடர் தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கு வகையில் பலத்த அடியை திருப்பி கொடுக்கும் முனைப்பில் விளையாடலாம்.

டபிள்யூபிஎல் 2025 தொடரின் எலிமினேட்டர் போட்டி மும்பை இந்தியன்ஸ் மகளிர் - குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே மும்பை பார்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
லீக் சுற்று முடிவில் மும்பை இந்தியன்ஸ் மகளில் 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்ற இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளை பெற்று 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் தனது முந்தைய போட்டியில் ஆர்சிபி மகளிர் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. குஜராத் ஜெயண்ட்ஸ் தனது முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிராக தோல்வியடைந்தது. இதையடுத்து எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதும்.