டபிள்யூபிஎல் 2025: கடைசி ஓவரில் சிக்ஸர் மழை! வெற்றி அருகே சென்று கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபிக்கு ஆறுதல்
டபிள்யூபிஎல் 2025: கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு 16 ரன்கள் குவித்தது. வெற்றியை நெருக்க வந்த போதிலும் தோல்வியை தழுவிதால் நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை கோட்டை விட்டது.

டபிள்யூபிஎல் 2025 தொடரின் 20வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மகளிர் - ஆர்சிபி மகளிர் அணிகளுக்கு இடையே பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த சீசனின் கடைசி லீக் போட்டியாக இது அமைந்திருந்தது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆர்சிபி மகளிர் அணி 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆர்சிபி மகளிர் அணி தொடரை விட்டு வெளியேறிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் தனது முந்தைய போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆர்சிபி அணி யுபி வாரியர்ஸ்க்கு எதிராக 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
