டபிள்யூபிஎல் 2025: தெறிக்கவிட்ட குஜராத் ஜெயண்ட்ஸ்.. முந்தைய தோல்விக்கு பதிலடி! டெல்லி வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி
டபிள்யூபிஎல் 2025: குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான முந்தைய மோதலில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி தரும் விதமாக குஜராத் ஜெயண்ட்ஸ் பெரிய இலக்கை சேஸ் செய்ததுடன், ப்ளேஆஃப் வாய்ப்பையும் நெருங்கியுள்ளது

டபிள்யூபிஎல் 2025 தொடரின் 17வது லீக் போட்டி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் - குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது.
டெல்லி கேபிடல்ஸ் தனது முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முந்தைய போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இதையடுத்து இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 177 ரன்கள் குவித்தது. இதை சேஸ் செய்த குஜராத் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க: ஒரே நாளில் அதிக ரன்கள்.. வீரேந்தர் ஷேவாக் ஆக மாறிய ஷெபாலி
குஜராத் ஜெயண்ட்ஸ் சேஸிங்
டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், மெக் லேனிங் - ஷெபாலி வர்மா அதிரடியால் டெல்லி கேபிடல்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் 177 ரன்கள் எடுத்தது. இந்த சவாலான இலக்கை சேஸ் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோள் 70, பீத் மூனி 44 ரன்கள் எடுத்தனர். ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசன் ஆகியோர் தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பீத் மூனி - ஹர்லீன் தியோள் பார்ட்னர்ஷிப்
குஜராத் ஜெயண்ட்ஸ் ஓபனரான தயாளன் ஹேமலதா ஒரு ரன்னில் வெளியேறினார். இதன் பின்னர் பார்மில் இருக்கும் பீத் மூனி - ஹர்லீன் தியோள் ஆகியோர் பார்டனர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்ட இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தனர். பீத் மூனி 44 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் சிறிய கேமிய இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். 13 பந்துகளஇல் 22 ரன்கள் எடுத்து விட்டு வெளியேறினார்.
ஹர்லீன் தியோள் அரைசதம்
இதற்கிடையே சிறப்பாக பேட் செய்து வந்த ஹர்லீன் தியோள், 38 பந்தில் அரைசதமடித்தார். அப்போது குஜராத் வெற்றி பெற 29 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்று இருந்தது. இதையடுத்து தனது அதிரடியை தொடர்ந்த தியோள் ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
2 சிக்ஸர்கள், 2 பவுண்டரி அடித்த டியாண்ட்ரா டோட்டின் 10 பந்துகளில் 24 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற பின் துர்தஷ்டவசமாக அவுட்டானார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த தியோள் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். பின்னர் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் குஜராத் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னர் இரண்டாவது இடத்தை பிடித்த குஜராத் ப்ளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
மோசமான பவுலிங்
பேட்டிங்கில் வலிமையை தொடர்ந்து காட்டி வரும் டெல்லி கேபிடல்ஸ், இந்த ஆட்டத்தில் பவுலிங்கில் கோட்டை விட்டது. ஷிகா பாண்டே 4 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெஸ் ஜோனாசன் 2 விக்கெட்டுகளை எடுத்தபோதிலும், 3.3 ஓவரில் 38 ரன்களை வாரி வழங்கினார். அதேபோல் அன்னாபெல் சதர்லாண்ட் 4 ஓவரில் 46 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்தவில்லை. இந்த சீசனின் கடைசி போட்டியில் தோல்வியுடன் முடித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ்

டாபிக்ஸ்