தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup Overview  /  உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணி

உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணி


ஐசிசி உலக கோப்பை 2023ல் மொத்தம் 10 போட்டிகள் பங்கேற்கின்றன. 8 அணிகள் நேரடியாக தகுதி அடைய இரண்டு அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகின வந்தது. இந்தியாவுடன் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ரன்னர் அப் நியூசிலாந்து, ஐந்து முறை சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த முறை ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்கின்றனர்.

அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பைக்காக ஏற்கனவே அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட டீமை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா தங்கள் வலுவான அணிக்கு இந்த மெகா போட்டிக்காக அறிவித்துள்ளது. அதே போல் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை போன்ற டீம்ஸ் கூட தங்கள் அணிகளை அறிவிக்கின்றன.

இந்தியா உலக கோப்பை 2023க்கு 15 பேர் கொண்ட அணியை அறிவித்துவிட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இந்த அணியை பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அறிவித்தனர். நேஷனல் கிரிக்கெட் அகாடமி (என்சிஏ) தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கே.எல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டதால், எந்த ஆச்சரியமும் எழவில்லை. ஆசிய கோப்பை தொடரிலும் கே.எல்.ராகுலும் சிறப்பாக விளையாடினார். இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் மீண்டும் தங்கள் இடங்களைப் பிடித்தனர். அதே நேரத்தில் இந்தியாவின் ஆசியக் கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக இருந்த சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இர்பான் பதான், ராபின் உத்தப்பா போன்ற முன்னாள் பவுலர்களும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.

ரோஹித் அணியை வழிநடத்துகிறார். இதில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் சுப்மான் கில் ஆகியோரின் அதிரடி வீரர்களாக உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களில், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தங்கள் இடத்தைப் பிடித்துள்ளனர். அதே நேரத்தில் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் குறைந்த வரிசையை வலுப்படுத்தும் திறன் காரணமாக விரும்பப்பட்டார்.

துரதிர்ஷ்டவசமாக, சமீபத்தில் நீண்ட காயத்திலிருந்து திரும்பிய பிரசித் கிருஷ்ணா, இந்தியாவின் ஆசியக் கோப்பை அணியில் இடம் பெற்றார்.

 • Australia
 • David Warner
  David WarnerBatsman
 • Marnus Labuschagne
  Marnus LabuschagneBatsman
 • Steven Smith
  Steven SmithBatsman
 • Travis Head
  Travis HeadBatsman
 • Cameron Green
  Cameron GreenAll-Rounder
 • Glenn Maxwell
  Glenn MaxwellAll-Rounder
 • Marcus Stoinis
  Marcus StoinisAll-Rounder
 • Mitchell Marsh
  Mitchell MarshAll-Rounder
 • Sean Abbott
  Sean AbbottAll-Rounder
 • Alex Carey
  Alex CareyWicket Keeper
 • Josh Inglis
  Josh InglisWicket Keeper
 • Adam Zampa
  Adam ZampaBowler
 • Josh Hazlewood
  Josh HazlewoodBowler
 • Mitchell Starc
  Mitchell StarcBowler
 • Pat Cummins
  Pat CumminsBowler

News

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

Q: இந்திய அணியை உலகக் கோப்பையில் வழிநடத்தப்போகும் கேப்டன் யார்?

A: ரோகித் சர்மா

Q: இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் யார்?

A: ஷுப்மன் கில். இவருக்கு வயது 24 தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Q: பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தப்போவது யார்?

A: பாட் கம்மின்ஸ் வழிநடத்தப்போகிறார்.

Q: இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் லிஸ்ட் ?

A: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

Q: கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்காக நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் லிஸ்ட்?

A: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, வில் யங்.

Q: 2023 உலகக் கோப்பைக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்?

A: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் உட், கிறிஸ் வோக்ஸ்.

Q: உலகக் கோப்பை போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் லிஸ்ட்?

A: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷீத் கான், முஜீப் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹாக் பரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன் உல் ஹக்.

Q: 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தப்போகும் கேப்டன் யார்?

A: பாபர் அசாம்

Q: உலகக் கோப்பை அணிக்கு தேர்வாகியுள்ள பாகிஸ்தான் வீரர்கள் விவரம்?

A: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம்.