World Cup 2023: முதல் முறையாக டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50+ ஸ்கோர்! இந்தியா 410 ரன்கள் குவிப்பு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: முதல் முறையாக டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50+ ஸ்கோர்! இந்தியா 410 ரன்கள் குவிப்பு

World Cup 2023: முதல் முறையாக டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50+ ஸ்கோர்! இந்தியா 410 ரன்கள் குவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 12, 2023 09:37 PM IST

இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் அடித்து முதல் முறையாக சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா முதல் முறையாக 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.

சதமடித்த கேஎல் ராகுல் - ஷ்ரேயாஸ் ஐயர்
சதமடித்த கேஎல் ராகுல் - ஷ்ரேயாஸ் ஐயர்

இந்த அணி வெற்றி காம்பினேஷனை மாற்றாமல் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் இன்றைய போட்டியிலும் களமிறங்கியுள்ளது. நெதர்லாந்து அணியும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் விளையாடுகிறது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்128 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார். கேஎல் ராகுல் 102 ரன்கள் அடித்து அவுட்டானார். 62 பந்துகளில் சதமடித்த கேஎல் ராகுல், உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனை புரிந்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். கடைசி 10 ஓவரில் இந்தியா 126 ரன்கள் எடுத்துள்ளது.

அதேபோல் ரோஹித் ஷர்மா 61, சுப்மன் கில் 51, விராட் கோலி 51 ரன்கள் எடுத்துள்ளனர். நெதர்லாந்து பவுலர்களில் ரோலோஃப் வான் டெர் மெர்வே, பாஸ் டி லீட், பால் வான் மீகெரென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். லோகன் வேன் பீக் 10 ஓவரில் 107 ரன்களை வாரி வழங்கினார்.

நெதர்லாந்து அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற 411 என்ற இமாலய இலக்கை  சேஸ் செய்ய வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.