World Cup 2023, IND vs NZ: கோலி, ஷ்ரேயாஸ் சதம்! இந்திய பேட்ஸ்மேன்கள் முழு ஆதிக்கம் - நியூசிலாந்துக்கு 398 இலக்கு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023, Ind Vs Nz: கோலி, ஷ்ரேயாஸ் சதம்! இந்திய பேட்ஸ்மேன்கள் முழு ஆதிக்கம் - நியூசிலாந்துக்கு 398 இலக்கு

World Cup 2023, IND vs NZ: கோலி, ஷ்ரேயாஸ் சதம்! இந்திய பேட்ஸ்மேன்கள் முழு ஆதிக்கம் - நியூசிலாந்துக்கு 398 இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 15, 2023 07:34 PM IST

உலகக் கோப்பை 2023 தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளனர்.

சதமடித்த விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்
சதமடித்த விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்

இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் விளையாடுகிறது.

இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து பவுலர்களுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். 50 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி பேட்டர்களில் விராட் கோலி, ஷரேயாஸ் ஐயர் ஆகியோர் சதமடித்துள்ளனர்.

கோலி ஒரு நாள் போட்டியில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்து சரித்திரம் படைத்தார். ஒரு நாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிடித்தார். ஒரு நாள் போட்டிகளில் 49 சதமடித்து, அதிக சதம் என்ற  சச்சினின் சாதனையும் அவர் முன்னிலையில் கோலி முறியிடித்தார். தொடர்ந்து அதிரடியுடன் பேட் செய்த கோலி 113 பந்துகளில் 117 ரன்கள் அடித்து கோலி அவுட்டானார். 

இவரைத் தொடர்ந்து 67 பந்துகளில் சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 70 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர், உலகக் கோப்பை போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு சதத்தை அடித்தார்.

சுப்மன் கில் 79 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆகினார். பின்னர் கடைசி ஓவரில் பேட் செய்ய வந்த கில் கூடுதலாக ஒரு ரன் மட்டும் அடித்தார். அதிரடியான தொடக்கம் தந்த ரோஹித் ஷர்மா 47 ரன்கள் அடித்தார், கடைசி நேரத்தில் களமிறங்கி கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய கேஎல் ராகுல், 30 பந்துகளில் 39 ரன்கள் அடித்தார்.

நியூசிலாந்து பவுலர்களில் வேகப்பந்து வீச்சாளர் செளத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதிலும் 100 ரன்கள் விட்டுக்கொடுத்து வாரி வழங்கியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ட்ரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து பவுலர்களில் மிட்செல் சாண்டனர் தவிர மற்றவர்கள் அனைவரும் 6+ ரன்ரேட் விட்டுக்கொடுத்துள்ளனர்.

இந்தியா தனது இன்னிங்ஸில் 19 சிக்ஸர்களை பறக்க விட்டு வான வேடிக்கை காட்டியதுடன், 30 பவுண்டரிகளை அடித்துள்ளது.

உலகக் கோப்பை 2023 தொடர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் நியூசிலாந்து அணி 398 ரன்கள் என வரலாற்று சேஸிங்கை செய்ய வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.