World Cup 2023 Final: கம்மின்ஸ் சொன்னது போல் சைலாண்ட் ஆன மைதானம்! இந்தியாவை 240 ரன்களில் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா
பவுலிங், பீல்டிங் என இரண்டிலும் ஆரம்பம் முதலே இந்தியாவுக்கு நெருக்கடி தந்தது ஆஸ்திரேலியா. பேட் கம்மின்ஸ் சொன்னது போல் பார்வையாளர்கள் சைலண்ட் ஆக்கினர்.
உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. சுமார் 1.30 லட்சம் பார்வையாளர்கள் இந்த போட்டியை நேரில் காண்கின்றனர்.
இதில் டாஸ் வென்ற அணி ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இரு அணிகளும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளன.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 240 ரன்கள் அடித்து ஆல் அவுட்டாகியுள்ளது. இந்திய அணி கரைசேர்க்கும் விதமாக பேட் செய்த கேஎல் ராகுல் 66, விராட் கோலி 54 ரன்கள் எடுத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மா 47 ரன்கள் எடுத்தார்.
கடைசிகட்டத்தில் சூர்யகுமார் யாதவ் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 18 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
ஆஸ்திரேலியா பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் விதமாக பந்து வீசியதுடன், பீல்டிங்கிலும் கலக்கினர். அந்த அணியில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்