World Cup 2023: நெருக்கடி இல்லாமல் பேட் செய்த இங்கிலாந்து - 337 ரன்கள் குவிப்பு! வரலாறு படைக்குமா பாகிஸ்தான்?
நெருக்கடி இல்லாத போட்டியில் இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பேர்ஸ்டோ, ரூட், ஸ்டோக்ஸ் சிறப்பாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்ட நிலையில், 337 ரன்களை எடுத்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 44வது போட்டி பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஷ் படலர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால் மட்டுமே அரையிறுதியில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு என இருந்த நிலையில், முதல் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கும் இங்கிலாந்து டாஸ் நிகழ்விலேயே பாகிஸ்தான் கனவை தகர்த்தது.
பாகிஸ்தான் அணியில் ஹசன் அலிக்கு பதிலாக ஷதாப் கான் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பேட் செய்து அரைசதமடித்து 84 ரன்கள் எடுத்தார்.
இவருக்கு அடுத்தபடியாக ஜோ ரூட் 60, ஜானி பேர்ஸ்டோ 59 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் பவுலர்களில் ஹரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகின் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால் இந்த ஸ்கோர் 6.4 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும். அதேபோல் குறைந்தது 188 ரன்கள் எடுத்தால் மட்டுமே டாப் 5 இடத்தில் நீடிக்க முடியும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்