World Cup 2023: பாகிஸ்தான் 93 ரன்களில் தோல்வி! வெற்றியுடன் விடை பெற்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து
உலகக் கோப்பை 2023 தொடரை தோல்வியுடன் தொடங்கிய இங்கிலாந்து, வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 44வது போட்டி பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றதுகி. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஷ் படலர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால் மட்டுமே அரையிறுதியில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு என இருந்த நிலையில், முதல் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கும் இங்கிலாந்து டாஸ் நிகழ்விலேயே பாகிஸ்தான் கனவை தகர்த்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பேட் செய்து அரைசதமடித்து 84 ரன்கள் எடுத்தார்.
இவருக்கு அடுத்தபடியாக ஜோ ரூட் 60, ஜானி பேர்ஸ்டோ 59 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் பவுலர்களில் ஹரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகின் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால் இந்த ஸ்கோர் 6.4 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும். அதேபோல் குறைந்தது 188 ரன்கள் எடுத்தால் மட்டுமே டாப் 5 இடத்தில் நீடிக்க முடியும். இந்த சூழ்நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43.3 ஓவரில் 244 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட்டாகியுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களில் ஆகா சல்மான் மட்டும் நிலைந்து நின்று பேட் செய்து அரைசதமடித்தார். அவர் 51 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இவருக்கு அடுத்தபடியாக பாபர் அசாம் 38, முகமது ரிஸ்வான் 36 ரன்கல் எடுத்தனர். இங்கிலாந்து பவுலர்களில் ஸ்பின்னர்களான அடில் ரஷித், மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடிய டேவிட் வில்லி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உலகக் கோப்பை 2023 தொடரை தோல்வியுடன் தொடங்கி, வெற்றியுடன் முடித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்