World Cup 2023, IND vs NZ Semi Final: அதே டீமுடன் களமிறங்கும் இரு அணிகள்..! டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்
உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் நுழையப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் எந்த மாற்றமும் செய்யாமல் வெற்றி கூட்டணியுடன் களமிறங்குகிறது.
உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் விளையாடுகிறது.
உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியா - நியூசிலாந்து அணிகல் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 4, நியூசிஸாந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லை.
இந்தியா - நியூசிலாந்து அணிகல் ஐசிசி போட்டிகளில் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9 போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. அத்துடன் ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இந்தியா ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. எனவே அந்த வரலாற்றை இந்தியா மாற்றியமைக்குமா என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதையடுத்து இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் மீண்டும் இவ்விரு அணிகளும் மோதுகிறது. இந்த கடந்த உலகக் கோப்பை தொடரில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்
இந்தியா: சுப்மன் கில், ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்
நியூசிலாந்து: டேவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிளிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சாண்ட்னர், டிம் செளத்தி, லாக்கி பெர்குசன், டரெண்ட் போல்ட்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்