World Cup 2023: வங்கதேச பேட்டர்கள் அதிரடி - 306 ரன்கள் குவிப்பு! சாதனை நிகழ்த்துமா ஆஸ்திரேலியா?
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டுமானால் சாதனை சேஸிங் செய்ய வேண்டும்.
உலகக் கோப்பை 2023 தொடரின் 43வது போட்டி ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே புனேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேச அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டவுகித் ஹிர்தோய் அரைசதமடித்து 74 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ஷாண்டோ 45, ஓபனிங் பேட்ஸ்மேன்கள் லிட்டன் தாஸ் 36, டன்சித் ஹாசன் 36 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா பவுலர்களில் சீன் அபாட், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார்.
இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் ஆஸ்திரேலியா அணி 307 ரன்கள் என மிகப் பெரிய சேஸிங்கை செய்ய வேண்டும். இதை செய்யும்பட்சத்தில் உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் மிக பெரிய சேஸிங்காக இது அமையும். இதற்கு முன்னர் உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச சேஸ் 292 என உள்ளது. இதுவும் இந்த உலகக் கோப்பை தொடரில் கடந்த போட்டியில் தான் ஆஸ்திரேலியா அணி நிகழ்த்தியது. மேக்ஸ்வெல் அடித்த 201 ரன்களால் இந்த சேஸ் சாத்தியமானது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்