Rohit Sharma: தோல்வி அடையாமல் சாம்பியன்.. எங்களை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது - ரோஹித் ஷர்மா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rohit Sharma: தோல்வி அடையாமல் சாம்பியன்.. எங்களை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது - ரோஹித் ஷர்மா

Rohit Sharma: தோல்வி அடையாமல் சாம்பியன்.. எங்களை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது - ரோஹித் ஷர்மா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 12, 2025 08:00 AM IST

Rohit Sharma: டாஸ் தோற்றாலும் ஒரு போட்டியிலும் தோல்வி அடையாமல் சாம்பியன்ஸ் டிராபி வென்று சாம்பியன் ஆகியுள்ளோம். பும்ரா இல்லாமலும் சரியாக திட்டமிட்டு செயல்பட்டுள்ளோம். எங்களை யாரும் சாதரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

தோல்வி அடையாமல் சாம்பியன்.. எங்களை யாரும் சாதரணமாக எடுத்துக்கொள்ள கூடாது - ரோஹித் ஷர்மா
தோல்வி அடையாமல் சாம்பியன்.. எங்களை யாரும் சாதரணமாக எடுத்துக்கொள்ள கூடாது - ரோஹித் ஷர்மா

கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற பிறது, தற்போது சாம்பியன்ஸ் டிராபியை வென்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஐசிசி கோப்பையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது.

இந்த அணியின் வெற்றியை ரசிகர்களை கொண்டாடி தீர்த்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரில், சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டியளித்தார். 

தோல்வியின்றி கோப்பை வென்றுள்ளோம்

ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பிரத்யேகமாக பேசும்போது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வி அடையாமல் வென்றது குறித்து ரோஹித் ஷர்மா கூறியதாவது:

"இந்த தொடரில் விளையாடிய 5 போட்டிகளிலும் டாஸில் தோல்வியுற்றோம். ஆனால் ஒரு போட்டியையும் தோல்வி அடையாமல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளோம். எந்த ஒரு தொடரிலும் தோல்வியின்றி இறுதி வரை செல்வது மிகப்பெரிய சவாலான விஷயம் தான். ஆனால் நாங்கள் அதைச் சாதித்துள்ளோம். சாம்பியன் பட்டம் வென்ற பிறகுதான் இதன் தனித்துவம் உணரப்பட்டது. இதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.

நாங்கள் முழு உறுதியுடனும் ஒருங்கிணைந்த அணியாகவும் விளையாடினோம். ஒவ்வொருவரும் தங்களுக்கான பங்கையும், பொறுப்புகளையும் தெளிவாகப் புரிந்து செயல்பட்டனர். மைதானத்தில் உணர்வுகள் அதிகமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் ஆட்டத்தின் மீது மிகுந்த உறுதியுடன் செயல்படுகிறோம். எங்கள் அணியின் முக்கிய நோக்கம் வெற்றியைத் தேடுவதுதான். அதை அடைய எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம்

பும்ரா இல்லாமலும் சிறப்பாக செயல்பாடு

பும்ரா அணியில் இல்லை என்பதற்கான முன்னேற்பாடுகளை நாங்கள் செய்திருந்தோம். அவரது காயம் முழுமையாக குணமடையாமல் இருந்தது. ஏனெனில் அவர் இன்னும் பல ஆண்டுகள் விளையாட வேண்டிய வேகப்பந்து வீச்சாளர். இந்தக் குறையை எப்படி சமாளிப்பது என்று திட்டமிடும்போது, முகமது ஷமி நம்மிடம் இருந்தது பெரிய பலமாக இருந்தது.

ஐசிசி போட்டிகளில் அவர் நிரூபித்த ஆட்டத்திறனை நினைத்துப் பார்த்தால், அவர் எப்போதும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். இந்த தொடருக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் விளையாடிய இரண்டு போட்டிகள் நம்பிக்கையை ஏற்படுத்தின. மேலும், அர்ஷ்தீப் மற்றும் ஹர்ஷித் போன்ற பந்துவீச்சாளர்கள் மீது நாங்கள் முழுமையாக நம்பிக்கை வைத்திருந்தோம்.

போட்டிக்கு முன்பு இருந்த 20-25 நாட்களை பயிற்சிக்கும், ஆடுகள நிலைமைகளை ஆராய்வதற்கும் பயன்படுத்தினோம். இந்த முறையான அணுகுமுறைகளே பும்ரா இல்லாதிருந்தும் சிறப்பாக செயல்பட உதவின.

நாக்அவுட்களில் தொடர் தோல்விக்கு பிறகு புதிய அணுகுமுறை

நீண்ட நாட்களாக அணிக்குள் விவாதித்து வரும் விஷயமாக, பலமுறை இறுதிப்போட்டி வரை சென்றும் வெற்றி பெற முடியவில்லை என்பது தான் இருந்தது. 2015 அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், அப்போது நாம் செய்யாத தவறுகளைச் செய்துவிட்டோம். அதே நிலை 2016, 2017 ஆகிய ஆண்டுகளிலும் ஏற்பட்டது.

2023 உலகக்கோப்பையில் முதல் ஒன்பது போட்டிகளில் சிறப்பாக விளையாடினோம், ஆனால் இறுதிப்போட்டியில் தோற்றுவிட்டோம். 2019 உலகக்கோப்பையில் நான் ஐந்து சதங்கள் அடித்திருந்தேன். ஆனால் அணி வெற்றி பெறாத நிலையில், அந்த சாதனைக்கு முக்கியத்துவம் இல்லை.

அதன் பிறகு, அணியின் எண்ணங்களை மாற்ற முயற்சித்தோம். ஒவ்வொருவரும் வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று கூறி வந்தோம். இந்த புதிய அணுகுமுறையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அனைவரும் வந்ததே வெற்றிக்குக் காரணம்.

எங்களை சாதரணமாக எடுத்துக்கொள்ள கூடாது

மற்ற அணிகள் எங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை நான் கட்டாயமாகச் சொல்ல விரும்பவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்வதென்றால், எங்களை எப்போதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஐந்து விக்கெட்டுகள் விழுந்த பிறகும் நாங்கள் மீண்டு வர முடியும். மைதானத்தில் எங்கள் அணியினர் எப்போதும் போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள். நாங்கள் எப்போதும் உறுதியுடன் விளையாடுவோம், எந்த நிலையிலிருந்தும் வெல்லும் ஆற்றல் எங்களிடம் உள்ளது என்பதைக் காட்ட விரும்புகிறோம். அந்த அளவுக்கு ஒரு சரியான அமைப்பை கொண்ட அணியாகவும், ஒவ்வொருவரும் தங்களுக்கான பங்கை அறிந்தவர்களாகவும் செயல்படுகிறோம். எங்களை எதிர்க்கும் அணிகள் எப்போதும் முழுமையாக எங்களை அணுக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு

இனி இந்திய அணியுடன் எதிர்காலம்?

நான் தற்போதைக்கு எந்த முடிவையும் எடுக்கவில்லை. 2027 உலகக்கோப்பைக்கு விளையாடுவேனா என்பது பற்றி எல்லாம் இப்போது சொல்ல விரும்பவில்லை. தற்போது எனது கவனம் எனது ஆட்டத்திலும், அணியுடன் இணைந்து நேரத்தை செலவிடுவதிலும் உள்ளது. என்னை அணியில் என் சக வீரர்கள் விரும்புகிறார்களா என்பதே எனக்கு முக்கியமான விஷயம்.

இவ்வாறு ரோஹித் ஷர்மா கூறினார்.

 

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு
Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.