டாப்-2 இடத்துக்கான பஞ்சாபின் கனவு உடைந்து போகுமா? இந்த அணியுடன் கடைசி மேட்ச்; பஞ்சாப் தோற்றால்...
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  டாப்-2 இடத்துக்கான பஞ்சாபின் கனவு உடைந்து போகுமா? இந்த அணியுடன் கடைசி மேட்ச்; பஞ்சாப் தோற்றால்...

டாப்-2 இடத்துக்கான பஞ்சாபின் கனவு உடைந்து போகுமா? இந்த அணியுடன் கடைசி மேட்ச்; பஞ்சாப் தோற்றால்...

Manigandan K T HT Tamil
Published May 25, 2025 10:53 AM IST

பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிடம் சனிக்கிழமை இரவு தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியால் டாப்-2 இடத்தைப் பிடிப்பதற்கான அவர்களின் கணக்கு குழம்பிப் போய்விட்டது. இப்போது டாப்-2 இடத்தைப் பிடிக்க, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கடைசிப் போட்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

டாப்-2 இடத்துக்கான பஞ்சாபின் கனவு உடைந்து போகுமா? இந்த அணியுடன் கடைசி மேட்ச்; பஞ்சாப் தோற்றால்...
டாப்-2 இடத்துக்கான பஞ்சாபின் கனவு உடைந்து போகுமா? இந்த அணியுடன் கடைசி மேட்ச்; பஞ்சாப் தோற்றால்...

PBKS-ன் MI-யுடனான கடைசிப் போர்

பஞ்சாப் கிங்ஸ் அணி, தங்களது IPL 2025 லீக் சுற்றுப் போட்டியின் கடைசிப் போட்டியை, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன், 26 மே அன்று விளையாட உள்ளது. PBKS அணி MI அணியை வென்றால், டாப்-2 இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. மும்பை அணியை வென்றால், பஞ்சாப் அணியின் கணக்கில் 19 புள்ளிகள் இருக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தங்களது கடைசிப் போட்டியில் வென்று 19 புள்ளிகளைப் பெற்றால், நிகர ரன் ரேட் அடிப்படையில் முடிவு வரும். தற்போது நிகர ரன் ரேட்டில் PBKS, RCB-யை விட முன்னே உள்ளது.

பஞ்சாப் தோற்றால் டாப்-2 கனவு நொறுங்கும்

PBKS அணி, கடைசிப் போட்டியில் MI அணிடம் தோற்றால், அவர்களின் புள்ளிகள் 17-ல் நின்றுவிடும். தற்போது 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றால் 18 புள்ளிகளைப் பெறும். இந்த நிலையில், MI அணி டாப்-2 இடத்தைப் பிடிக்க வாய்ப்பு அதிகரிக்கும். RCB அணி தங்களது கடைசிப் போட்டியில் தோற்றால் மட்டுமே இந்த நிலை ஏற்படும். இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் விளையாட வேண்டியிருக்கும்.

ஐபிஎல் 2025 தொடரின் 66வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் பஞ்சாப் கிங்ஸ் 12 போட்டிகளில் 17 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் 13 போட்டிகளில் 13 புள்ளிகளை பெற்று 5வது இடத்திலும் இருந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டியாக இது அமைந்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். டெல்லி கேபிடல்ஸ் அணியில் அபிஷேக் போரலுக்கு பதிலாக செடிகுல்லா அடல் சேர்க்கப்பட்டார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 206 ரன்கள் குவித்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.