IPL Match 30 Highlights: நேற்றிரவு நடந்த RCB vs SRH போட்டியின் முக்கிய ஹைலைட்ஸ்-உலகக் கோப்பை பைனலை நினைவூட்டிய ஹெட்
IPL Match 30 Highlights: நேற்றைய ஐபிஎல் போட்டியில் வென்றது யார்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஏப்ரல் 15 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. இந்த போட்டி ஐபிஎல் அதிகபட்ச ஸ்கோரை உருவாக்கியது. இந்த சீசனில் ஏற்கனேவ எஸ்ஆர்எச் அதிக ஸ்கோர்களை அடித்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஏப்ரல் 15 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. 5 போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்ற பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.
ஹைதராபாத்தின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆர்சிபி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கிய ஹெட், அவர்களை செட்டில் ஆக விடாமல் திணறடித்தார். அபிஷேக் 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது, ஹைதராபாத் அணி 8.1 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. ஆர்சிபி சார்பில் ரீஸ் டாப்லே முதல் திருப்புமுனையைப் பெற்றார்.
ஆனால், டிராவிஸ் தொடர்ந்து பெங்களூரு பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக இருந்ததால் ஆர்சிபி உண்மையில் கலங்கித்தான் போனது. ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக எண்ணிக்கையிலான சிக்ஸர்களை (8) அடித்தார் மற்றும் ஐபிஎல் 2024 இல் அதிவேக 100 ரன்கள் எடுத்தார். கிறிஸ் கெய்ல் (30 பந்துகள்), யூசுப் பதான் (37 பந்துகள்) மற்றும் டேவிட் மில்லர் (38 பந்துகள்) ஆகியோருக்குப் பிறகு அவரது 39 பந்துகளில் சதம் இப்போது ஐபிஎல் வரலாற்றில் நான்காவது அதிகபட்சமாக உள்ளது.