தமிழ் செய்திகள்  /  Cricket  /  Which Stadiums Recorded The Highest Individual Scores In The Ipl 2023 Season

IPL 2023 Season Highest Scores: ஐபிஎல் 2023 சீசனில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் பதிவான மைதானங்கள் லிஸ்ட் இதோ?

Manigandan K T HT Tamil
Mar 17, 2024 06:00 AM IST

IPL 2023 Season: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 625 ரன்களை எடுத்துள்ளார். மொத்தம் 5 அரை சதங்களைப் பதிவு செய்துள்ளார். இவர் கடந்த சீசனில் மட்டும் 26 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். 82 ஃபோர்ஸை விரட்டியிருக்கிறார். இவர் 124 ரன்களை பதிவு செய்திருக்கிறார்.

நரேந்திர மோடி ஸ்டேடியம்
நரேந்திர மோடி ஸ்டேடியம் (HT)

ட்ரெண்டிங் செய்திகள்

சுப்மன் கில்

இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பது சுப்மன் கில். இவர் குஜராத் டைட்டன் அணிக்காக விளையாடினார். கடந்த சீசனில் அதிரடி காட்ட இவர் தவறவில்லை. 17 ஆட்டங்களில் ஆடிய அவர், 890 ரன்களை குவித்தார். 2வது வரிசையில் களமிறங்கிய அவர், ஓர் ஆட்டத்தில் 129 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். மொத்தம் 33 சிக்ஸர்களை விளாசி அசத்திய கில், 85 ஃபோர்ஸை அடித்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவே 129 ரன்களை விளாசினார் சுப்மன் கில். கடந்த ஆண்டு மே 26 ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த ஸ்கோரை அவர் பதிவு செய்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 625 ரன்களை எடுத்துள்ளார். மொத்தம் 5 அரை சதங்களைப் பதிவு செய்துள்ளார். இவர் கடந்த சீசனில் மட்டும் 26 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். 82 ஃபோர்ஸை விரட்டியிருக்கிறார். இவர் 124 ரன்களை ஓர் ஆட்டத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பதிவு செய்ய ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ம் தேதி இந்த ஸ்கோரை யஷஸ்வி பதிவு செய்தார்.

வெங்கடேஷ் ஐயர்

இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த சீசனில் இவரது அதிகபட்சம் 104. இவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவே இந்த ஸ்கோரை பதிவு செய்தார். வான்கடே மைதானத்தில் தான் இந்த ஸ்கோரை பதிவு செய்து அசத்தினார். நாள் ஏப்ரல் 16, 2023.

வெறும் 51 பந்துகளில் 104 ரன்களை இவர் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹென்றிச் கிளாசன்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார் ஹென்றிச் கிளாசன். இவர் 104 ரன்களை விளாசி அசத்தினார். இவரும் 51 பந்துகளில் இந்த ஸ்கோரை தொட்டார். இவரது ஸ்டிரைக் ரேட் 203.92 ஆக இருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ஸ்கோரை அவர் பதிவு செய்தார். ஐதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த ஸ்கோரை பதிவு செய்தார் ஹென்றிச் கிளாசன். நாள் மே 18, 2023.

சுப்மன் கில்

மறுபடியும் இதே பட்டியலில் 5வது இடத்தில் இடம்பெறுவது சுப்மன் கில் தான். இவர் ஆர்சிபி அணிக்கு எதிராக 103 ரன்களை விளாசினார். மேலும், அந்த ஆட்டத்தில் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு எம் சின்னசாமி ஸ்டேயத்தில் இந்த ஸ்கோரை அவர் பதிவு செய்தார். மே 21, 2023 அன்று இந்த ஸ்கோரை அவர் பதிவு செய்து அசத்தினார்.

ஐபிஎல் திருவிழாவில் இந்த வருடமும் பல சாதனைகளை எதிர்பார்க்கலாம்.

IPL_Entry_Point