IND vs SL 3rd ODI Result: சாதித்த இலங்கை..27 வருட காத்திருப்புக்கு முடிவு - இந்தியாவை பொட்டலம் கட்டி மாஸ் வெற்றி-wellalage fifer helps srilanka to beat india in decider and wins odi series on home after 27 years - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Sl 3rd Odi Result: சாதித்த இலங்கை..27 வருட காத்திருப்புக்கு முடிவு - இந்தியாவை பொட்டலம் கட்டி மாஸ் வெற்றி

IND vs SL 3rd ODI Result: சாதித்த இலங்கை..27 வருட காத்திருப்புக்கு முடிவு - இந்தியாவை பொட்டலம் கட்டி மாஸ் வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 08, 2024 05:21 PM IST

27 வருட காத்திருப்புக்கு முடிவு கட்டியசாதித்த இலங்கை, இந்தியாவை பொட்டலம் கட்டி மாஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியுள்ளது. 1997ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.

27 வருட காத்திருப்புக்கு முடிவு, இந்தியாவை பொட்டலம் கட்டி மாஸ் வெற்றி
27 வருட காத்திருப்புக்கு முடிவு, இந்தியாவை பொட்டலம் கட்டி மாஸ் வெற்றி (AP)

இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டை ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரு நாள் தொடருக்கான வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இதில் வென்றால் மட்டுமே இந்தியா ஒரு நாள் தொடரை சமன் செய்ய முடியும். அதே வேளையில் 1997க்கு பிறகு இலங்கை அதன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றதே இல்லை. எனவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இரு அணிகளுக்கும் இந்த போட்டி அமைந்திருந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியில் கேஎல் ராகுல், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பதிலாக ரிஷப் பண்ட், ரியான் பராக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அதேபோல் இலங்கை அணியில் அகிலா தனஞ்ஜெயாவுக்கு பதிலாக மகேஷ் தீக்‌ஷனா சேர்க்கப்பட்டார்.

இலங்கை பேட்டிங்

இதையடுத்து முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் பின்னர் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. இந்த தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது.

அதிகபட்சமாக அவிஷ்கா பெர்ணான்டோ 96, குசால் மெண்டிஸ் 59, நிசங்கா 45 ரன்கள் அடித்தனர்.

இந்திய பவுலர்களில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இந்தியா சேஸிங்

249 ரன்கள் என்கிற இலக்கை விரட்டிய இந்தியா 26.1 ஒவரில் 138 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் இலங்கை 110 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் ஷர்மா 35, வாஷிங்டன் சுந்தர் 30 ரன்கள் அடித்தனர். அத்துடன் 6 இந்திய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

இலங்கை பவுலர்களில் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மகேஷ் தீக்‌ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அஷிதா பெர்ணான்டோ ஒரு விக்கெட்டை எடுத்தார்.

அவிஷ்கா பெர்ணான்டோ ஆட்டநாயகனாகவும், துனித் வெல்லலகே தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 1997க்கு பிறகு உள்ளூர் தொடரில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை 27 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.