Virat Kohli: ’விராட் கோலி வீட்டில் மீண்டும் குவா குவா சத்தம்!’ ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அனுஷ்கா சர்மா!
”கோஹ்லியும் அனுஷ்காவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே கடந்தஜனவரி 1, 2021 அன்று வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது”

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா தம்பதியினர் தங்களுக்கு இரண்டாவது குழந்தையாக ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், "மிகுந்த மகிழ்ச்சியுடனும், எங்கள் இதயங்கள் அனைவரின் அன்புடனும், பிப்ரவரி 15 ஆம் தேதி, எங்கள் ஆண் குழந்தை ஆகாய் மற்றும் வாமிகாவின் சிறிய சகோதரனை இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்!" என பதிவிட்டுள்ளனர்.
"எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் நாங்கள் தேடுகிறோம். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை தயவுசெய்து மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்பும் நன்றியும். விராட் & அனுஷ்கா என பதிவிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தார். ஹைதராபாத்தில் தொடக்க ஆட்டம் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன் கோலி தொடரில் இருந்து விலகினார். இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் அணி நிர்வாகத்திடம் கோஹ்லி தனது முடிவைப் பற்றிப் பேசியதாக பிசிசிஐ அறிக்கை கூறிருந்தது.
தனது இரண்டாவது குழந்தைக்காக குடும்பத்துடன் கோலி நேரம் செலவிடுகிறார் என முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரல் ஆனது.
ருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு தனது கருத்தில் இருந்து டிவில்லியர்ஸ் பின் வாங்கி இருந்தது நினைவு கூறத்தக்கது.
கோஹ்லியும் அனுஷ்காவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே கடந்தஜனவரி 1, 2021 அன்று வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்