HT Tamil Cricket SPL: கடந்த ஆண்டு அதிக வரி செலுத்திய 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்
2024ல் அதிக வரி செலுத்திய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என பார்ப்போம். 2024 ஆம் ஆண்டில் அதிக வரி செலுத்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஸ்டார் இந்தியா பேட்டர் கே.எல் ராகுல் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு அதிக வரி செலுத்திய கிரிக்கெட் நட்சத்திரங்களின் பட்டியலில் விராட் கோலி, எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பல நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஐபிஎல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பல இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருமானம் விறுவிறுவென உயர்ந்துள்ளது. விராட் கோலி, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் இந்தப் போட்டியின் மூலம் 20 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார்கள். அதேபோல் அவர்கள் செலுத்தும் வரியின் அளவும் அதிகமாகவே இருக்கும்.
ரிஷப் பந்த்
2024 ஆம் ஆண்டில் அதிக வரி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஸ்டார் இந்தியா பேட்டர் ரிஷப் பந்த் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் பந்த் மொத்த வரியாக 10 கோடி ரூபாய் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் சிக்கிய பிறகு, பந்த் காயத்திலிருந்து மீண்டும் திரும்பினார்.