விராட் கோலி சாதனைகள்: அதிக ரன், சதம், அதிக கேட்ச்.. ஒரே போட்டியில் சாதனை மேல் சாதனை புரிந்த கோலி
விராட் கோலி சாதனைகள்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 51வது சதம், 14 ஆயிரம் ரன்கள், அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என ஒரே போட்டியில் சாதனை மேல் சாதனை புரிந்துள்ளார் விராட் கோலி. இதுமட்டுமல்லாமல் சேஸிங்கில் மட்டும் அதிக சதத்தை அடித்த வீரராகவும் திகழ்கிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அணியும் இரண்டு தொடர் தோல்விகளால் அரையிறுதிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. இனி எஞ்யிருக்கும் போட்டியில் பெறும் வெற்றி, இதர அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே பாகிஸ்தான் அணிக்காக அரையிறுதி வாய்ப்பு என்பது இருந்தாலும், அது சாத்தியமற்றதாகவே உள்ளது
கோலி சாதனைகள்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளை கோலி நிகழ்த்தியுள்ளார். அதன்படி அதிக சதமடித்த வீரர், ஒரு நாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்கள் விரைவாக கடந்த வீரர், ஒரு நாள் போட்டியில் அதிக கேட்ச்கள் என சாதனை மேல் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
கடைசியாக 2023 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சதமடித்த கோலி 117 ரன்கள் அடித்தார். இதன் பிறகு சுமார் 15 மாதம் இடைவெளிக்கு பிறகு தற்போது சதமடித்துள்ளார்.