Virat Kohli: மிகவும் மதிப்புமிக்க பிரபலம் - ரன்வீர் சிங், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கோலி! பிராண்ட் மதிப்பு எவ்வளவு?
பிரபலங்களின் பிராண்ட் மதிப்பீட்டு அறிக்கையின்படி, விராட் கோலி இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிரபலமாக இருந்து வருகிறது. இவருக்கு அடுத்தபடிதான் ரன்வீர் சிங், ஷாருக்கான் உள்ளனர். அந்த வகையில் சினிமா பிரபலங்களை பின்னுக்கு தள்ளியவராக கோலி உள்ளார். அவரது பிராண்ட் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மிகவும் மதிப்புமிக்க பிரபலம் லிஸ்டில் ரன்வீர் சிங், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கோலி (ANI)
நடந்து வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் மிகவும் மதிப்பு மிக்க வீரராக இருந்து வரும் விராட் கோலி இதுவரை பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் லைம்லைட்டில் முக்கிய வீரராகவே இருந்து வருகிறார். டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இதுவரை பெரிய சாதனை நிகழ்த்தவில்லை என்றாலும், கிரிக்கெட்டுக்கு வெளியே மைல்கல் சாதனை ஒன்றை செய்துள்ளார்.
ரன்வீர் சிங், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி மிகவும் மதிப்புமிக்க பிரபலங்களின் லிஸ்டில் பாலிவுட் டாப் நடிகர்களான ரன்வீர் சிங், ஷாருக்கான் உள்ளட்டோரை பின்னுக்கு தள்ளியுள்ளாார்.
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் தனது இருப்பை நீடித்திருக்கும் கோலி, இந்த ஆண்டில் தனது ஒட்டுமொத்த பிராண்ட் மதிப்பை கிட்டத்தட்ட 29 சதவீதம் அதிகரித்துள்ளார்.
