Virat Kohli 50th Century: ஒரு நாள் கிரிக்கெட்டில் 50வது சதம்! சச்சின் முன்னிலையில் சாதித்த கிங் கோலி
உலகக் கோப்பை 2023 தொடரில் 3வது சதத்தை அடித்திருக்கும் விராட் கோலி, ஒரு நாள் போட்டிகளில் 50வது சதத்தை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார். சச்சின் முன்னிலையில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது மற்றொரு ஸ்பெஷலாக அமைந்துள்ளது,
உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் விளையாடுகிறது.
இதையடுத்து சிறப்பாக பேட் செய்து வந்த விராட் கோலி ஆட்டத்தின் 41.4 ஓவரில், ஒரு நாள் போட்டிகளில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்தார். வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டென்டுல்கர், சுனில் கவாஸ்கர், விவிந் ரிச்சர்ட்ஸ் முன்னிலையில் மைல்கல் சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.
விராட் கோலியின் இந்த சதத்துக்கு பலத்த ஆராவாரத்துடன் மைதானம் முழுவதும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினர். அதேபோல் சச்சின் டென்டுல்கரும் எழுந்து நின்று thumbs up செய்து கோலிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்தியாவுக்கு வழக்கமான அதிரடியான தொடக்கத்தை தந்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. முதல் ஓவரிலிருந்தே அடித்து விளையாடிய ரோஹித் 29 பந்துகளில் 47 ரன்கள் அடித்து அவுட்டானார். அணியிந் ஸ்கோர் அப்போது 71 ரன்கள் என இருந்தது. தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களை அடித்தார் ரோஹித் ஷர்மா.
அவர் அவுட்டான பிறகு, அதிரடி ஆட்டத்தை கில் வெளிப்படுத்த தொடங்கினார். தொடர்ந்து ரோஹித் போல் கில்லும் பவுண்டரி மூலம் ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில், 41 பந்துகளில் அரைசதமடித்தார்.
ஒரு புறம் கில் அடித்து விளையாடி, கோலி நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து ஆட்டத்தின் 22.4 ஓவரின்போது 65 பந்துகளில் 79 ரன்கல் எடுத்திருந்த சுப்மன் கில்லுக்கு தசை பிடிப்பு ஏற்பட தொடர்ந்து பேட் செய்ய முடியாமல் களத்தை விட்டு வெளியேறினார்.
இவர் சென்ற பிறகு கோலியுடன் இணைந்து பார்டனர்ஷிப்பில் ஈடுபட்ட ஷரேயாஸ், நியூசிலாந்து பவுலர்கள் பந்து வீச்சை அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் என தெறிக்கவிட்டார். தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த ஷ்ரேயாஸ் 36.2 ஓவரில் அரைசதமடித்தார். ஆட்டத்தின் 38 ஓவரின் முடிவில் தசை பிடிப்பால் கோலி அவதிப்பட்டார். அப்போது அவர் 92 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
பின்னர் பிஸியோ வந்த உடனடியாக அளிக்கப்பட்ட சிகிச்சையில் தளவடைந்த கோலி தொடர்ந்து நிதானத்தை கடைப்பிடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை அடித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்