DC vs SRH Innings Break: மூன்றாவது முறையாக 250+ ஸ்கோர் - டெல்லி பவுலர்களை அடித்து நொறுக்கிய சன்ரைசர்ஸ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Dc Vs Srh Innings Break: மூன்றாவது முறையாக 250+ ஸ்கோர் - டெல்லி பவுலர்களை அடித்து நொறுக்கிய சன்ரைசர்ஸ்

DC vs SRH Innings Break: மூன்றாவது முறையாக 250+ ஸ்கோர் - டெல்லி பவுலர்களை அடித்து நொறுக்கிய சன்ரைசர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 20, 2024 10:58 PM IST

10 ஓவரில் 158 ரன்கள் அடித்து அதிக ரன்களை அடித்த அணி என்ற தனித்துவமான சாதனையை சன் ரைசர்ஸ் அணி நிகழ்த்தியுள்ளது. ஓபனிங்கில் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா பினிஷிங்கில் ஷபாஸ் அகமது ஆகியோரின் அதிரடியாக் சன் ரைசர்ஸ் அணி இந்த சீசனில் மூன்றாவது முறையாக 250 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் ட்ராவிஸ் ஹெட்
பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் ட்ராவிஸ் ஹெட் (AFP)

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் 7 போட்டிகளில் 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலும், சன் ரைசர்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றியுடன் 4வது இடத்திலும் உள்ளது.

டெல்லி அணியில் ஷாய் ஹோப்க்கு பதிலாக டேவிட் வார்னர் சேர்க்கப்பட்டுள்ளார். சன் ரைசர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

டெல்லி பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் அடித்துள்ளது. இந்த சீசனில் நான்காவது முறையாக 200+ ஸ்கோரும், மூன்றாவது முறையாக 250+ ஸ்கோரையும் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 89, ஷபாஸ் அகமது 59,  அபிஷேக் ஷர்மா 46, நிதிஷ் குமார் ரெட்டி 37 ரன்கள் எடுத்துள்ளனர்.

டெல்லி பவுலர்களில் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முகேஷ் குமார், அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.

டெல்லி அணியின் அனைத்து பவுலர்களையும் சன் ரைசர்ஸ் அடித்து துவைத்துள்ளனர். அந்த அணியின் ஸ்டிரைக் பவுலரான கலீல் அகமது 3 ஓவர்களில் 51 ரன்களை வாரி வழங்கினார். அக்‌ஷர் படேல் மட்டும் சிறப்பாக பவுலிங் செய்து 29 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் ஷர்மா மிரட்டல் அடி

உச்சகட்ட பார்மில் இருந்து வரும் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோர் வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக மிரட்ட தொடங்கினர். பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் எடுத்தனர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தனர். அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர் தனது இன்னிங்ஸில் 6 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்தார்.

இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த ஐடன் மார்க்ரம் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக விளையாடி வந்த ட்ராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 89 ரன்கள் அடித்து சதத்தை மிஸ் செய்தார்.

அதேபோல் ஹென்ரிச் கிளாசன் 15 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். நிதிஷ் குமார் ரெட்டி அதிரடி காட்டி 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தனர்

ஷபாஸ் அகமது பினிஷ்

கடைசி கட்டத்தில் அதிரடி பினிஷ் கொடுத்தார் ஷபாஸ் அகமது. அடுத்தடுத்து சிக்ஸர், பவுண்டரி என வெளுத்து வாங்கினார். 29 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.