TNPL 2024: புது பெயர்களுடன் 2 அணிகள், களைகட்ட காத்திருக்கும் 8வது ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா
டி.என்.பி.எல் 2024 சீஸனிலும் கேரவன் ஃபார்மட் அடிப்படையில் முதல் லெக் போட்டிகள் சேலத்தில் ஜூலை 5 முதல் 11ஆம் தேதி வரையும் இரண்டாவது லெக் கோயம்புத்தூரில் ஜூலை 13 முதல் 18ஆம் தேதி வரையும் மூன்றாவது லெக் போட்டிகள் திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் 24ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8வது சீஸன் வரும் இன்று பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரானது சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 மாநகரங்களில் நடைபெறுகிறது. ஜூலை 5ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையிலான இந்த தொடரில் ப்ளேஆஃப்ஸ் மற்றும் இறுதிப்போட்டி உட்பட மொத்தம் 32 போட்டிகள் நடைபெறுகிறது.
கடந்த இரண்டு சீஸன்களைப் போல, டி.என்.பி.எல் 2024 சீஸனிலும் கேரவன் ஃபார்மட் அடிப்படையில் முதல் லெக் போட்டிகள் சேலத்தில் ஜூலை 5 முதல் 11ஆம் தேதி வரையும் இரண்டாவது லெக் கோயம்புத்தூரில் ஜூலை 13 முதல் 18ஆம் தேதி வரையும் மூன்றாவது லெக் போட்டிகள் திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் 24ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. இதில் கடைசி லெக் போட்டிகள் திண்டுக்கல்லில் ஜூலை 26 முதல் 28 வரை நடைபெறுவதோடு 2024 சீஸனின் முதல் 2 ப்ளேஆஃப்ஸ் போட்டிகளான குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் முறையே ஜூலை 30 மற்றும் 31ஆம் தேதி திண்டுக்கல் மாநகரத்திலேயே நடைபெறுகிறது. இதில் 2024 சீஸனின் குவாலிஃபையர் 2(ஆகஸ்ட் 2) மற்றும் இறுதிப்போட்டி (ஆகஸ்ட் 4) சென்னை சேப்பாக்கத்தில் 2021ஆம் ஆண்டிற்குப்பின் மீண்டும் நடைபெறவுள்ளது
நேரம் எப்போது?
ஒவ்வொரு போட்டிகளும் இரவு 7.15 மணிக்கும் டபுள் ஹெட்டர் போட்டிகள் இருக்கும் சமயத்தில் பிற்பகல் 3.15 மணிக்கும் போட்டிகள் நடத்தப்படும். மொத்தமாக இந்த சீஸனில் 7 டபுள் ஹெட்டர் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் ப்ளேஆஃப்ஸ் போட்டியின் போது மழையால் ஆட்டம் குறுக்கிட்டால் ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும் நடைமுறை சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் பின்பற்றப்படும்.