Team india: கோலி, ரோஹித் ஓய்வுக்கு பின் களமிறங்கும் புதிய இந்திய அணி! மூன்று புதிய வீரர்கள் அறிமுகம்
கோலி, ரோஹித், ஜடேஜாவுக்கு ஓய்வு பின்னர் புதிய அணியாக களமிறங்கும் இந்தியா அணியில் மூன்று புதிய வீரர்கள் அறிமுகம் ஆகிறார்கள். புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா முதல் டி20 போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எதிர்கொள்கிறது.

டி20 உலகக் கோப்பை 2024 வென்ற மகிழ்ச்சி தருணம் முடிவடைந்த ஒரு வாரம் கடந்திருக்கும் நிலையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.
புதிய இந்திய அணி
இந்திய அணியின் சீனியர் வீரர்களாக இருந்து வந்த விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 உலகக் கோப்பை சாம்பியன் என்ற தங்களது கனவு நிறைவேறிய பிறகு ஓய்வை அறிவித்தனர். இளம் வீரர்களுக்கு வழிவிடும் விதமாக மூன்று மூத்த வீரர்களின் ஓய்வுக்கு பின்னரும், டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாலும் முற்றிலும் புதிய அணியாக ஜிம்பாப்வே சென்றுள்ளது.
அதன்படி அணிக்கு புதிய கேப்டனாக இளம் ஓபனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ஐபிஎல் 2024 தொடரில் தங்களது திறமையை வெளிக்காட்டிய இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.