கில் தலைமையில் இந்தியாவின் இளம்படை! கோலி தான் டாப்.. இங்கிலாந்து மண்ணில் சாதித்த இந்திய கேப்டன்கள் லிஸ்ட்
இங்கிலாந்தில் கேப்டனாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றவராக விராட் கோலி உள்ளார். இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியை கோலி 10 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். இதில் 3 வெற்றிகளை பெற்றுள்ளார்.

இந்தியா vs இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20 முதல் தொடங்க உள்ளது. இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் ஷுப்மான் கில் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணி அனுபவமின்மை இல்லாத அணியாக செல்கிறது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
இளம் இந்திய அணியினர், இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற உற்சாகத்தில் உள்ளனர். லீட்ஸில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் கில் தனது கேப்டன்சி பதவியை தொடங்குவார், அவர் களத்தில் இறங்கியவுடன் இந்தியாவின் ஐந்தாவது இளைய கேப்டன் என்ற பெருமை பெறுவார். அதே நேரத்தில், அவர் இந்த தொடரில் பெறும் முதல் வெற்றிக்கு பின்னர் வரலாற்றை உருவாக்க முடியும். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் இளைய கேப்டனாக என்று வரலாற்றில் இடம்பெறுவார்.
இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் சாதனை சிறப்பு வாய்ந்ததாக எதுவும் இல்லை. இதுவரை இங்கு விளையாடிய 67 போட்டிகளில், இந்திய அணி 9 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில், இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்கள் என்றால், இந்த லிஸ்டில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தவிர, கபில் தேவ், செளரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்ற புகழ்பெற்ற வீரர்களின் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்தில் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்