டி20 மும்பை லீக் சீசன் 3-க்கான வீரர்கள் பதிவை தொடங்கியது மும்பை கிரிக்கெட் சங்கம்!
மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி20 மும்பை லீக்கின் மூன்றாவது சீசனுக்கான வீரர்கள் பதிவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

மும்பை டி20 லீக்கின் மூன்றாவது சீசனுக்கான வீரர்கள் பதிவை மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. மும்பையின் மிகச்சிறந்த கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்துவதில் பெயர் பெற்ற இந்த லீக் பல வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கு ஒரு தளமாக இருந்து வருகிறது. இது வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், பிரமாண்டமான மேடையில் ஒரு அடையாளத்தை உருவாக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நகரின் பல்வேறு கார்னர்களின் பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு அணிகளின் பங்கேற்புடன், வரவிருக்கும் மூன்றாவது பதிப்பு மே 27 அன்று தொடங்கும்.
"வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு. பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த லீக் மூலம் தங்கள் அடையாளத்தை உருவாக்கியுள்ளனர், மேலும் இந்த தளத்தை அதிகம் பயன்படுத்த வீரர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். டி20 மும்பை லீக் நகரத்தின் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு படிக்கல்லாக இருந்து வருகிறது, மேலும் சீசன் 3 இன்னும் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. புதிய திறமைகள் உருவாவதைக் காண நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று மும்பை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அபய் ஹடாப் கூறினார்.
16 வயதுக்கு மேற்பட்ட எம்சிஏ-பதிவு செய்யப்பட்ட அனைத்து வீரர்களும் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் எம்சிஏவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
